திருநீற்றை கொட்டி அவமரியாதை : #மன்னிப்பு_கேள்_ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்..!!!

3 November 2020, 3:11 pm
Quick Share

தேவர் நினைவிடத்தில் திருநீற்றை கொட்டி அவமரியாதை செய்த ஸ்டாலினுக்கு தொடர்ந்து அழுத்தம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தேவர் ஜெயந்தியன்று பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது, அங்கு வழங்கப்பட்ட திருநீற்றை வாங்கிக் கொண்ட ஸ்டாலின், கழுத்தில் கொஞ்சம் பூசிக் கொண்டு, மிச்சத்தை கீழே எரிந்து விட்டுச் சென்றார். இது அங்கிருந்த கேமிராக்களில் பதிவாகியது.

அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் அன்றைய தினமே கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

Stalin - Updatenews360

இந்த நிலையில், தேவர் நினைவிடத்தில் அவமதிப்பு செய்த திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி #மன்னிப்புகேள்ஸ்டாலின் என்னும் ஹேஸ்டேக் டிரண்டாக்கப்பட்டு வருகிறது.

மேலும், பெரியார் கொள்கை கொண்ட ஸ்டாலினை தேவர் ஜெயந்திக்கு வருமாறு யார் சொல்லி அழுதது..?, குல்லா போட்டு கஞ்சி குடிச்சா பகுத்தறிவு, நெற்றியில் திருநீறு வைத்தால் மூடநம்பிக்கையா.? எனப் பல்லேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மேலும், தேவரை அவமதித்த முக ஸ்டாலின், உடனடியாக பசும்பொன் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் எங்கு சென்றாலும் உங்களது கூட்டணியை எதிர்ப்போம், தென்மாவட்டத்தில் நீ கால் பதிக்கவே முடியாது என நெட்டிசன்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த முறை இந்த வீபதிதான் திமுக தோல்விக்கு காரணமாக இருக்கப் போவதாகவும் அவர் கூறி வருகின்றனர். தேவர் விவகாரம் எதிர்வரும் தேர்தலில் திமுகவிற்கு விபூதியை அடித்து விடுமோ.? என்ற அச்சம் திமுகவினரிடையே எழுந்துள்ளது.

Views: - 22

0

0

1 thought on “திருநீற்றை கொட்டி அவமரியாதை : #மன்னிப்பு_கேள்_ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்..!!!

Comments are closed.