டிரெண்டிங்கில் #வரிகட்டுங்க_விஜய்… டுவிட்டரில் மோதிக் கொள்ளும் அஜித் – விஜய் ரசிகர்கள்…!!!

13 July 2021, 5:28 pm
actor vijay - ajith - updatenews360
Quick Share

சென்னை : வெளிநாட்டு காருக்கான இறக்குமதி வரி செலுத்தாத விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் மோதிக் கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்தில் இருந்து 2012ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் என்னும் உயர் சொகுசு காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். இந்தக் காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை. எனவே, நடிகர் விஜயின் ரோல் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி வசூலிக்கத் தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு நீதிபதி எஎம் சுப்ரமணியம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவை தள்ளுபடி செய்த அவர் கூறியதாவது :- புகழ்பெற்ற சினிமா நடிகர்கள் வரியை நன்கொடையாக நினைக்கக் கூடாது. அது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு. மக்கள் செலுத்தக் கூடிய வரியினால்தான் அரசு இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது. வரி ஏய்ப்பு என்பது தேசத்துரோகம். இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும், எனக் கூறினார்.

இந்த நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான இறக்குமதி வரி செலுத்தாத விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், #வரிகட்டுங்க_விஜய் என்னும் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், வரி ஏய்ப்பு விஜய் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளையும் அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பதிலுக்கு, விஜய் ரசிகர்களால் #கடனைஅடைங்க_அஜித் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Views: - 134

0

0