உதயநிதி கோரிக்கை… நிராகரிப்பா..? கண்துடைப்பா..? கர்ணனால் மாரி செல்வராஜுக்கு வந்த சோதனை..!!!

14 April 2021, 8:24 pm
karnan - maari - updatenews360
Quick Share

மாரி செல்வராஜின் இயக்கத்திலும், நடிகர் தனுஷின் அற்புதமான நடிப்பிலும் உருவாகி, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சாதிய வன்கொடுமைக்கு எதிராக இந்தப் படம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, அதிமுக ஆட்சியின் போது நடந்த கொடியன்குளம் கலவரத்தை திமுக ஆட்சியில் நடந்ததைப் போல குறிப்பிட்டிருப்பதாகவும், இதனை மாற்றக் கோரி இயக்குநர் மாரி செல்வராஜிடமும், நடிகர் தனுஷிடம் வலியுறுத்தியிருப்பதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்த டுவிட்டர் பதிவில், “1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்துள்ளனர்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனால், திரைப்படத்தில் 1997க்கு பதிலாக 1995 என்று மாற்றம் செய்யப்படும் என திமுகவினரும், ரசிகர்களும் எதிர்பார்த்து வந்தனர்.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக 90களின் பிற்பகுதி என்று பொத்தாம் பொதுவாக மாற்றம் செய்துள்ள கர்ணன் படக்குழுவினர். இது திமுகவினருக்கு மட்டுமின்றி உதயநிதியின் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

1995ல் நடந்ததாக உதயநிதி குறிப்பிட்டு சொன்ன நிலையிலும், பொதுவான ஆண்டை சொல்லி மாற்றம் செய்திதற்கு என்ன காரணம் என்றும்..? இதுதான் உங்களது அதிமுக பாசமா..? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், 95ம் ஆண்டு என்று உதயநிதி குறிப்பிட்டு சொன்ன நிலையிலும், அவரது கோரிக்கையை மாரி செல்வராஜ் முழுவதுமாக ஏற்க மறுத்தாரா..? என்றும் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஆனால், திரைப்பட விமர்சகர்களோ, ஒருவேளை இது இயக்குநர்களுக்கு உண்டான தன்மானப் பிரச்சனை என்பதால், பொதுவான ஒன்றை மாற்றம் செய்திருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

Views: - 41

0

0