தமிழகத்தில் விடிய விடிய விடாத மழை : எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழு விபரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2021, 8:26 am
Rain Leave -Updatenews360
Quick Share

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் கனமழை தீவிரமடைந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 11ஆம் தேதி வரை மிதமான மழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கனமழை காரணமாக திருச்சி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, சேலம், நாகை கொடைக்கானல் பகுதி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல தஞ்சை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 512

0

1