உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

Author: Babu Lakshmanan
1 July 2021, 4:33 pm
uppur thermal power plant - updatenrews360
Quick Share

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சுமார் 1,600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் வகையில், ஆர்எஸ் மங்கலம் தாலுக்காவுக்குட்பட்ட உப்பூர், வளமாவூர், திருப்பாலைக்குடி, நாகனேந்தல் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி 1000 ஏக்கர் பரப்பளவில் 2 அனல்மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. ரூ.12,665 கோடி மதிப்பில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உப்பூர் அனல்மின்நிலையத்தை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை எனக் கூறி, தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த தடையை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும் பதிலளிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

Views: - 317

0

0