பெட்ரோல் விலையை சமாளிக்க முடியாது…அப்போ இதுதான் ஒரே வழி: கர்நாடகா எம்.பி. கொடுத்த ஐடியா..!!

12 July 2021, 5:53 pm
Quick Share

பெங்களூரு: பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என்று கர்நாடக பா.ஜ., எம்.பி., சித்தேஷ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் தாவணகெரே தொகுதி பா.ஜ. எம்.பி.யாக இருப்பவர் சித்தேஷ்வர். இவர் தாவணகெரேவுக்கு வந்த போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறையும். பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர்களின் விலையை குறைக்க பிரதமர் மோடி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும். சைக்கிள் பயன்படுத்துவதால் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது, சிக்கனமாது. இதன்மூலம் உடல் வலிமை பெறுவதுடன், எந்த நோயும் நம்மை தாக்காது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Views: - 84

0

0