கருப்பு துண்டு இல்லாமல் சுவாமி கும்பிட்ட வைகோ… வைரலாகும் வீடியோவால் நெட்டிசன்கள் விமர்சனம்…!

Author: Babu Lakshmanan
30 November 2022, 2:31 pm
Quick Share

கடவுள் மறுப்பு இயக்கமான திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து உருவானது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த திமுகவில் இருந்து பிரிந்து வந்த வைகோ, மதிமுகவை உருவாக்கினார்.

கடவுளை மற, மனிதனை நினை என்று ஒவ்வொரு பெரியார் சிலையிலும், பொறிக்கப்பட்டுள்ள நிலையில், பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்து வரும் ஒருவராகிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திகழ்ந்து வருகிறார். இதனை நிரூபிக்கும் விதமாகவே அவரும் கறுப்பு துண்டு அணிந்தே தனது அரசியல் தோற்றத்தை வெளிக்காட்டி வருகிறார்.

இதனிடையே, இரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசியலில் கடவுள் மறுப்பு கொள்கைக்கென்று தனியிடம் உண்டு என்றும், ஆனால், கடவுள் மறுப்பு கொள்கை மூலம் மக்களை அடைவது சிரமம் என்று கூறியுள்ள வைகோ, வழிபாட்டுத்தலங்களுக்கு செல்லுங்கள் என்று அறிவுரை கூறியது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், கடவுள் கொள்கை மறுப்பில் இருந்து வைகோ விலகுகிறாரா..? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், தோளில் கருப்பு துண்டு இல்லாமல் வைகோ சுவாமி கும்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் சுவாமி கும்பிட்டு விபூதி வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு எப்போது நடந்தது என்று தெரியாத நிலையில், வைரலாகும் வீடியோ குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Views: - 398

0

0