பிரசாந்த் கிஷோர் இயக்கிய ‘வேல் அவதாரம்’ : ஸ்டாலினுக்கு கை கொடுக்குமா?

25 January 2021, 1:01 pm
PK Stalin - Updatenews360
Quick Share

தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் புதுப்புது அவதாரங்கள் எடுப்பது வழக்கம். அதை வாக்காளர்களை கவர்வதற்கான உத்தி என்று கூட சொல்லலாம். பெரும்பாலும் இதுபோன்ற அவதாரங்களை தங்களது கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு உட்பட்டே அரசியல் தலைவர்கள் எடுப்பார்கள்.

இதற்கு முரண்பட்ட வகையில் புதிய வேடமும் போடமாட்டார்கள். எந்த அவதாரமும் எடுக்க மாட்டார்கள். இத்தகைய நிலைப்பாட்டைத்தான் திமுக காலங்காலமாக கடைபிடித்தும் வந்தது.

DMK's role as kingmaker could prevail even after Kalaignar's death

அதுவும், குறிப்பாக மறைந்த முதல்வர் கருணாநிதி இருந்தவரை ஒருபோதும் பக்தி அவதாரம் எடுத்தது இல்லை.
யாராவது திமுக நிர்வாகிகள் குங்குமம் வைத்திருந்தால் என்னய்யா நெற்றியில் ரத்தம் வடிகிறது என்றுதான் கேலியாக கேட்பார்.

தற்போதைய திமுக தலைவரான ஸ்டாலினும் தனது தந்தையின் வழியைத்தான் இதுநாள் வரை பின்பற்றி வந்தார்.
இந்து மத நம்பிக்கைகளையும், இந்து மத தெய்வங்களையும் அவமதித்து பேசுவது அவருடைய வாடிக்கையாக இருந்தது.

KMDK - Nathineer Inaippu Manadu - Thalapathi M.K.Stalin Speech - YouTube

சில மாதங்களுக்கு முன்பு கருப்பர் கூட்டம் என்னும் அமைப்பு கந்தர் சஷ்டி கவசத்தையும், இந்து மத பெண் தெய்வங்களையும் அவமதித்து வீடியோ வெளியிட்டபோது தமிழகமே கொந்தளித்து எழுந்தது.

Watching 'God vs No God' Media 'Dangal' in Tamil Nadu | Clarion India

ஆனால் ஸ்டாலின் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. அதைக் கண்டிக்க கூட இல்லை. இத்தனைக்கும் அந்த கருப்பர் கூட்டத்திற்கும் திமுக தொழில்நுட்ப பிரிவினருக்கும்
நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.

அப்போதும் கூட ஸ்டாலின் அதைக் கண்டிக்கவில்லை.
மாறாக,திமுகவுக்கும், கருப்பர் கூட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றுதான் சொன்னார்.

Controversy over DMK leader MK Stalin's temple visit

இதைத் தொடர்ந்து இஸ்லாமியர் இல்ல திருமணத்திற்கு சென்ற அவர் அங்கு இந்து திருமண சம்பிரதாய முறைகளை மிகவும் கேலி செய்து பேசினார். அவருக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டபோது நெற்றியில் பூசிவிட்ட குங்குமத்தை உடனடியாக அழித்தார்.

Thevar Jayanthi': CM Palaniswami, OPS, Stalin and others pay homage - The  Hindu

இதேபோல் தேவர் ஜெயந்திக்காக பசும்பொன் சென்ற அவருக்கு அங்கு திருநீறு தந்தனர். அதை கையால் எடுத்து கீழே தட்டி விட்டதாக கூறப்பட்டது சர்ச்சை ஆனது.

இவையெல்லாமே கடந்த ஓரிரு ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள். அதுவும் ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்பு நடந்தவை.

Campaign tour in Coimbatore: Kanimozhi MP hears complaints from traders in  farmers market || கோவையில் பிரசார பயணம்: உழவர் சந்தையில் வியாபாரிகளிடம்  குறைகளை கேட்ட கனிமொழி எம்.பி.

போதாக்குறைக்கு ஸ்டாலினின் தங்கையும் திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி, இளைஞரணி செயலாளரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி போன்றோரும் இந்து மத கடவுள்களை கேலி பேச ஆரம்பித்தனர்.

Stalin's son Udhayanidhi appointed DMK youth wing state secretary -  Oneindia News

ஏழுமலையான் கோவில் உண்டியலுக்கு எதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு? என்று கனிமொழி குதர்க்கமாக கேள்வி எழுப்பினார். உதயநிதியின் பாணி இதில் கொஞ்சம் வித்தியாசமானது.

Udhay Stalin's Vinayagar idol photo on Twitter draws flak from supporters  and opposition | The News Minute

கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நள்ளிரவு தனது மகள் பிள்ளையார் சிலையுடன் கையில் இருப்பது போன்ற ஒரு படத்தை அவர் டுவிட்டரில் பதிவிட்டார். ஆனால் இதற்கு திராவிட அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. உடனே அந்த பதிவை நீக்கிய உதயநிதி எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. என் மகளுக்காகத்தான் பிள்ளையார் சிலையுடன் இருப்பது போன்ற படத்தை டுவிட்டரில் போட்டேன் என்று விளக்கம் கொடுத்து பின் வாங்கினார்.

Prashant Kishor meets Mamata Banerjee again, may work with TMC for 2021  assembly polls | West Bengal News | Zee News

இந்த விவரங்கள் எல்லாம் திமுகவின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருக்கு மெல்ல மெல்ல தெரிய வந்தபின் அவர் உஷாரானர்.

சட்டப் பேரவை தேர்தல் வரை இப்படியே போனால் இந்துக்களின் கோபத்தை முழுமையாக திமுக சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.

மேலும் திமுகவின் இந்த நிலைப்பாடு மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை கண்டறிய கடந்த மாதம் தனது ‘ஐபேக் டீம்’ மூலம் பிரசாந்த் கிஷோர் ரகசிய சர்வே ஒன்றையும் எடுத்தார்.

அதில் கிடைத்த ரிசல்ட் அவரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்து மதத்தைச் சேர்ந்த வாக்காளர்களில் 90 சதவீதம் பேர் இந்துமதத்தையும் இந்து கடவுள்களையும், இந்து மத நம்பிக்கைகளையும் திமுக அவமதிப்பதை அறவே விரும்பவில்லை என்று தெரியவந்தது.

மேலும் அந்த சர்வே முடிவின்படி திமுக ஆட்சியை பிடிப்பது மிக மிகக் கடினம் என்றும் தெரிய வந்திருந்தது.

இதைத்தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் இனி இப்படியெல்லாம் பேசினால் இந்துக்கள் ஒட்டு கிடைக்காது என்று கறாராக சொல்லிவிட்டார். எனவே தேர்தல் நடந்து முடியும் வரை இந்துக்களின் நன்மதிப்பைப் பெறும் விதமாக ஏதாவது நல்ல
பிள்ளையாக நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுரையும் வழங்கினார்.

MK Stalin's wife sends legal notice to Tamil magazine, seeks Rs 10 crore &  apology over 'dynasty' article

இதைத்தொடர்ந்தே ஸ்டாலினிடம் கடந்த 3 வாரங்களாக அதிரடி மாற்றம். படிப்படியாக அவருடைய பேச்சில் இந்த மாற்றம் தெரிய ஆரம்பித்தது. இரு வாரங்களுக்கு முன்பு பேசும்போது “இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை திமுக அவமதிப்பதாக தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். திமுகவில் ஒரு கோடி இந்துக்கள் இருக்கிறார்கள்” என்று கொஞ்சம் இறங்கி வந்தார்.

கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அவர் “என் மனைவி போகாத கோவிலே இல்லை. அதை நான் தடுத்ததும் கிடையாது. திமுகவில் உள்ளவர்கள் எத்தனையோ பேர் நெற்றியில் திருநீறு, குங்குமம் அணிகிறார்கள். அதை நான் விமர்சித்ததும் இல்லை” என்றார்.
இதில் ஸ்டாலின் இன்னும் கொஞ்சம் இறங்கி வந்து நான் நடுநிலைவாதி என்பதுபோல் காட்டிக் கொண்டார்.

இப்படி படிப்படியாக தனது வேஷத்தை மாற்றிக்கொண்டே வந்த ஸ்டாலின் நேற்று திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் புதிய அவதாரம் ஒன்றை எடுத்தார்.

M K Stalin's 'vel act' gets BJP, AIADMK barbs | Chennai News - Times of  India

அந்தக் கூட்டத்தில் அவருக்கு 8 கிலோ எடையும் 5 உயரமும் கொண்ட வெள்ளி வேல் பரிசாக வழங்கப்பட்டு அவர் கழுத்தில் ஆளுயர மாலையும் அணிவிக்கப்பட்டது. அந்த வேலை கையில் ஏந்திய ஸ்டாலின் நாடே பிரமிக்கும் வகையில் ‘போஸ்’ ஒன்றையும் கொடுத்தார்.

முழுவதுமாக அவர் ஒரு புதிய அவதாரம் எடுத்ததுபோல் இந்த ‘கெட்டப்’ இருந்தது. இதன்மூலம் ஸ்டாலின் என்ன சொல்ல வருகிறார் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

Stalin's flaunting of 'Vel' act of deceit: EPS - DTNext.in

இந்த வெள்ளி வேல், தை கிருத்திகை அன்று முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணி கோவில் உற்சவர் பாதங்களில் வைத்து பூஜிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் வேல் தாங்கி கொடுத்த இந்த போஸ் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்துக்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காக ஸ்டாலின் நாடகத்தை ஆரம்பித்து விட்டார் என்று ஒரு புறம் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Stalin wielding 'vel' to deceive people: Tamil Nadu CM Edappadi  Palaniswami- The New Indian Express

மறுபக்கம், கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி “பக்தி இல்லாதவர்களுக்கு இந்த வேலால் எந்த பயனும் இல்லை. முருகன் வரமும் தர மாட்டார்”என்று ஒரு போடு போட்டார்.

Defying govt's order, BJP launches Vel yatra from Tiruttani in Tamil Nadu |  The News Minute

தமிழக பாஜக தலைவர் முருகன் “நாங்கள் வேல் யாத்திரை தொடங்கியபோது அதை ஸ்டாலின் ஏளனம் செய்தார். இன்று அவரும் வேலைத்தான் கையில் எடுத்திருக்கிறார். அதுவும் நாங்கள் வேல் எடுத்த அதே ஊரில், அதே இடத்தில் அவரும் வேலை கையில் எடுத்திருக்கிறார்” என்று குத்தினார்.

கடவுள் மறுப்புக் கொள்கையில் தீவிரமாக உள்ள திராவிட அமைப்புகளோ ஸ்டாலினின் இந்த புதிய வேடம் கண்டு அரண்டு, மிரண்டு போயிருக்கிறார்கள்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக ஸ்டாலினை கதாநாயகனாக வைத்து பிரசாந்த் கிஷோர் இயக்கிய கூறப்படும் இந்த வேல் அவதாரம் திமுகவுக்கு கைகொடுக்குமா?…

Views: - 1

0

0