அதிமுகவில் பா.வளர்மதி, வைகைச்செல்வனுக்கு புதிய பொறுப்பு : ஓபிஎஸ் – இபிஎஸ் அறிவிப்பு

Author: Babu
23 July 2021, 7:32 pm
Quick Share

சென்னை : அதிமுகவில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மற்றும் வைகைச்செல்வனுக்கு புதிய பொறுப்புகளை வழங்கி அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கழக இலக்கிய அணிச்‌ செயலாளர்‌ பொறுப்பில்‌ இருக்கும்‌ திருமதி பா. வளர்மதி அவர்களும்‌, கழக கொள்கை பரப்பு துணைச்‌ செயலாளர்‌ பொறுப்பில்‌ இருக்கும்‌ முனைவர்‌ இன்று முதல்‌ அவரவர்‌ வகித்து வரும்‌ பொறுப்புகளில்‌ இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்‌. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக தலைமைக்‌ கழக நிர்வாகிகளாகவும்‌; சார்பு அமைப்புகளின்‌ துணை நிர்வாகிகளாகவும்‌ இன்று முதல்‌ நியமிக்கப்படுகிறார்கள்‌.

அதாவது, அதிமுக மகளிர் அணி செயலாளராக பா.வளர்மதியும், இலக்கிய அணி செயலாளராக வைகைச் செல்வனும் நியமனம் செய்யப்படுகின்றனர். அதேபோல, மகளிர் அணி இணைச்செயலாளராக மரகதம் குமரவேலும், இலக்கிய இணைச் செயலாளராக ஆனந்தராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 227

0

0