வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டிற்கு தடை இல்லை : அடுத்தடுத்து ஹைகோர்ட் ‘குட்டு’!!

Author: Babu Lakshmanan
25 August 2021, 5:02 pm
Chennai HC Order - Updatenews360
Quick Share

வன்னியர்களுக்கான 10.5 இடஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது மருத்துவ படிப்பில்வன்னியருக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த சட்டத்தை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

அப்போது, சட்டசபை தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீடுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேவேளையில், உள் ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பு இல்லாத நிலையில், இந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய தேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க மறுத்தனர். இட ஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, பணி நியமனங்கள் ஆகியவை இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என கூறி, வழக்கை செப்டம்பர் 14ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Views: - 206

0

0