ஷூ நனையாமல் இருக்க சேருக்கு சேர் தாவிய திருமா : சமூக நீதியை வெளுத்து வாங்கிய பாஜக.. பொங்கிய சிறுத்தைகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2021, 11:27 am
VCK Vs BJP - Updatenews360
Quick Share

சென்னை : நேற்று டெல்லிக்கு புறப்பட்ட திருமாவளவன் தனது ஷூ நனையாமல் இருக்க தனது ஆதரவாளர்கள் வரிசையாக வைத்த நாற்காலியில் தாவிதாவி வந்த காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல் திருமாவளவனின் வீடு சென்னை வேளச்சேரியில் உள்ளது.

சென்னையில் தொடர்மழை காரணமாக திருமாவளவனின் வீட்டிலும் தண்ணீர் புகுந்தது. ஆனால் எம்பியாக உள்ள திருமா, நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டியது கட்டாயமாக இருந்தது.

இதனால் வழக்கம் போல உடையணிந்து ஷூவிடன் தயாரான திருமாவளவன், மாடியில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் கீழே வந்து பார்த்ததும், கிட்டதட்ட 2 அடி உயரத்திற்கு மழைநீர் உள்ளே வந்திருப்பது தெரிந்தது.

ஷூவுடன் நடந்து செல்ல முடியாமல் தவித்த திருமாவை பார்த்த விசிக நிர்வாகிகள், தாங்கள் தோளில் தூக்கி செல்கிறோம் என கூறினர். அதை திருமா மறுத்துள்ளார். இதையடுத்து என்ன செய்யலாம் என யோசித்த அண்ணனின் விழுதுகள், அங்கிருந்து இரும்பு நாற்காலிகளை வரிசையாக வைத்தனர்.

பின்னர் திருமா ஒவ்வொரு நாற்காலியாக ஜம்ப செய்து வந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. மேலும் இந்த சம்பவத்திற்கு எதிர்மறை விமர்சனங்களும் குவிந்து வருகிறது.

சமூக நீதி பேசும் திருமா, தண்ணியில் கால் படாமல் ஏன் இப்படி போனார் என்ற கேள்விகளும் எழுந்தன. திருமாவின் வீடியோவை பார்த்த பாஜகவின் வினோஜ் பி செல்வம், டிவிட்டரில் என்ன திருமா சார்? கூட இருக்கறவங்கள இப்படி தான் நடத்துவீங்களா? சமூக நீதி, சமத்துவம்னு கம்பு சுத்துறதெல்லாம் சும்மாதானா? மழை தண்ணில் கால் வச்சு உங்களால நடக்க முடியாம பூர்வகுடி மக்களை அதிகாரம் பண்ணலாமா? அடங்கமறு, அத்துமீறு இதுக்கெல்லாம் அர்த்தம் இதுதானா என கடுமையான விமர்சனங்களை பதிவிட்டுள்ளார்.

ஆனால் இதற்கு பதிலளித்த விசிக நிர்வாகிகள், திருமாவின் காலில் புண் இருப்பதால் அவர் தண்ணீரில் கால் வைக்கவில்லை என்று விளக்கம் அளித்தனர். மேலும் உனக்கு கடவுள் கூட சிலை தான்டா அத தொளில் தூக்கி சுமந்து ஊர்வலம் போய் கோயில்ல வச்சுட்டு பிறகு தான் வேண்டுவ? ஆனா நாங்கள் தூக்கி சுமந்து செல்வது கடவுள் இல்லைடா அந்த கடவுள்கும் மேல எங்கள் குல சாமிடா என சிறுத்தைகள் பொங்கியுள்ளனர்.

Image

மேலும் திருமாவுக்கு ஆதவராக அவரது நிர்வாகிகள் அவருடைய காலில் ஏற்பட்ட காயத்தினை போட்டோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர். இதற்கு முன் பாஜக தலைவர் அண்ணாமலை மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட போது, முட்டி அளவு தண்ணீர் கூட இல்லாத இடத்தில் அண்ணாமலை படகில் சென்றார் என விசிக நிர்வாகிகள் விமர்சித்திருந்தனர். தற்போது இந்த வீடியோவை பார்த்த அண்ணாமலை ஆதரவாளர்கள் திருமாவுக்கு எதிராக விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

திருமாவுக்கு ஆதரவாக #திருமாவை_கொண்டாடுவோம் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி விசிக நிர்வாகிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 314

0

2