ஜெயலலிதாவின் வேதா நினைவில்லம் 28ம் தேதி மக்கள் பார்வைக்கு திறப்பு : தமிழக அரசு அறிவிப்பு

22 January 2021, 4:34 pm
vedha house - updatenews360
Quick Share

சென்னை : மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லம், வரும் 28ம் தேதி முதல் மக்களின் பார்வைக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா காலமான நிலையில் 2017ம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரின் போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு ஜெ. தீபா, தீபக் இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. ஆகையால் போயஸ் தோட்ட இல்லத்தை விலைக்கு வாங்கும் வகையில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு ரூ. 67,90,52,033ஐ டெபாசிட்டாக செலுத்தியது. இழப்பீட்டுத் தொகை செலுத்தியதால் போயஸ் தோட்ட வீடு அரசு உடைமையானது என்று அறிவிக்கப்பட்டது. இழப்பீட்டுத் தொகை பெற வேண்டிய உரியவர்கள் சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது.

eps - jayalalitha - updatenews360

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றமும், நினைவில்லம் அமைக்க அனுமதி வழங்கிவிட்டது. இதனால், அதற்கான துரித பணிகளை தமிழக அரசு மேற்கொண்டது. மேலும், ஜன.,27ம் தேதி ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், வரும் 28ம் தேதி முதல் மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லம் மக்களின் பார்வைக்கு திறக்கப்படுவதாக அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார். இந்த நினைவில்லத்தில்வ 15,000 புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Views: - 0

0

0