வேல்யாத்திரைக்கான தடையை எதிர்த்து பாஜக அவரச மனு : திட்டமிட்டபடி யாத்திரை நடக்கும் – முருகன் உறுதி..!!

7 November 2020, 5:41 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் நடத்தப்படவிருந்த வேல்யாத்திரைக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக சார்பில் நடைபெற இருந்த வேல்யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், திட்டமிட்டபடி, வேல்யாத்திரை நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று அவர் திருத்தணியில் சுவாமி தரிசனம் செய்ய காவல்துறையினரிடம் அனுமதி கோரினார். காவல்துறையினரும் 10 வாகனங்களில் செல்ல மட்டுமே அனுமதியளித்தனர்.

அதன்படி, திருத்தணி சென்ற எல்.முருகன் திருத்தணி கோவிலில் தரிசனம் செய்து முடித்து விட்டு, வேல் யாத்திரைக்காக தயார் செய்யப்பட்ட வேனில் ஏறியபடி எல்.முருகன் ஊர்வலத்தை தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து, தடையை மீறி வேல்யாத்திரையை நடத்திய பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், வேல்யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக அவசர மனு தாக்கல் செய்துள்ளது. இந்த அவரச மனு இன்று மாலை விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே, தமிழகத்தில் திட்டமிட்டபடி வேல்யாத்திரை நடைபெறும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாகவே, தமிழக அரசு வேல்யாத்திரைக்கு அனுமதியளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Views: - 22

0

0