ரொம்ப ரொம்ப URGENT… இன்னைக்குதான் கடைசி தேதி : மத்திய அரசுக்கு அவசர கடிதம் அனுப்பிய தமிழக அரசு!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 November 2023, 2:04 pm
Cm To Pm - Updateews360
Quick Share

ரொம்ப ரொம்ப URGENT… இன்னைக்குதான் கடைசி தேதி : மத்திய அரசுக்கு அவசர கடிதம் அனுப்பிய தமிழக அரசு!!!

தமிழ்நாட்டில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் நடவு தற்போதுதான் தீவிரமடைந்துள்ளது. பெரும்பாலான காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா நெற்பயிர் சாகுபடி பணிகளை தாமதமாகவே தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சம்பா, தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசம் நவம்பர் 15ஆம் தேதி, அதாவது இன்றுடன் நிறைவடைகிறது. தீபாவளி பண்டிகை காலம், இணைய சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் 60சதவிகிதம் வரையிலான விவசாயிகள் மட்டுமே தற்போது வரை பயிர் காப்பீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அதற்குரிய சான்றிதழ் பெற்று இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்யும் பருவ மழையின் காரணமாக இணைய சேவை சரிவர கிடைக்காததால் எந்த விண்ணப்பங்களையும் உள்ளீடு செய்ய இயலாமல் விவசாயிகளும், இ-சேவை மைய ஊழியர்களும் தவிக்கின்றனர்.

இதனால் தமிழ்நாட்டில் பயிர்க் காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க கோரி அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்கத்தினர் என பலரும் வலியுறுத்தினர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர், கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பயிர்க்காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தி மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு தமிழ்நாடு வேளாண்துறை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் “அரியலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் உட்பட மொத்தம் 27 மாவட்டங்களில் பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 15ஆம் தேதியுடன் அவகாசம் நிறைவடையவுள்ளது. பருவமழை தாமதம், காவிரியில் போதிய நீர் திறக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால் பயிர் நடவு தாமதமாகியுள்ளது.

பண்டிகை கால தொடர் விடுமுறையால் விவசாயிகளால் பயிர்க் காப்பீடு செய்ய முடியவில்லை. இதனால் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே தமிழ்நாட்டில் பயிர்க்காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வேளாண் ஆணையர் எல்.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

Views: - 152

0

0