தலைமையேற்கிராறா தளபதி? 2031 ஜோசப் விஜய் எனும் நான்… அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2021, 9:37 pm
Vijay Poster -Updatenews360
Quick Share

மதுரை : 2031ல் தேர்தலில் நடிகர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்ற தொனியில் ரசிகர்கள் போஸ்டரை ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் போஸ்டர் கலாச்சாரம் எல்லை மீறி போய்க்கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதுவும் சினிமா பிரபலங்களுக்காக அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்து அனைவரும் கவரும் வகையில் அடித்து ஒட்டப்படுவது ஒரு தனி ரகம்தான்.

அந்த வகையில் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் அரசியலுக்கு வருவாரோ இல்லையோ ஆனால் அவரது ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைத்து வந்து விடும் அளவுக்கு அவர்களது போஸ்டர் இருக்கும்.

அந்த வகையில் தான் தற்போது மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அதகளப்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் தனித்துவமான போஸ்டர்களை ஒட்டவைத்து டிரெண்டாகி வருவது வழக்கம்தான் என்றாலும் இந்த போஸ்டர் தமிழக அரசியல் கட்சிகளை உலுக்கியுள்ளது என்றே சொல்லலாம்.

காரணம் அந்த போஸ்டரில் ஒட்டபட்டுள்ள வாசகம். 2031 ஜோசப் விஜய் எனும் நான்.. உண்மையான நம்பிக்கையும்,, மாறா பற்றும் கொண்டிருப்போன் என்று உறுதி அளிக்கிறேன்.. 2021 உள்ளாட்சியில் நல்ல தேர்வு.. நீங்கள் தான் தமிழகத்தின் இறுதி தீர்வு என விஜய் ரசிகர்கள் அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

இந்த போஸ்டரால் மதுரையில் உள்ள அரசியல் கட்சியினரிடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 பேர் போட்டியிட்டு 110 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை வைத்து ரசிகர்கள் 2031ல் வரும் சட்டசபை தேர்தலில் விஜய் அரசியலுக்கு நுழைவார் என்றும், அப்படி நுழைந்தால் அவர் தான் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என சிம்பாலிக்காக போஸ்டரில் சொல்லி நம்பிக்கையுடன் காத்துள்ளனர்.

Views: - 288

0

0