விஜய் மக்கள் இயக்கத்தை எப்போதே கலைத்து விட்டோம் : மகன் விஜய் தொடர்ந்த வழக்கு… தந்தை எஸ்.ஏ.சி. பரபரப்பு பதில் மனு…!!

Author: Babu Lakshmanan
27 September 2021, 6:49 pm
SAC - vijay updatenews360
Quick Share

விஜய் மக்கள் இயக்கத்தை கலைத்து விட்டதாக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிட அனுமதியளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால், அதிர்ந்து போன நடிகர் விஜய், தன்னுடைய புகைப்படத்தையோ, பெயரையோ யாரும் எங்கும் பயன்படுத்தக் கூடாது என்று விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வரும் தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரிணைக்கு வந்த போது, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யக்கோரி, எஸ்ஏ சந்திரசேகருக்கு ஆணையிடப்பட்டது.

அதனடிப்படையில், இன்று பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என்று கடந்த பிப்ரவரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 135

0

0