இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் விஜயகாந்த் : மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!

Author: Babu
2 October 2020, 11:09 am
Vijayakanth - updatenews360
Quick Share

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரது மனைவி பிரேமலதாவுக்கும் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, இருவரும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே, கொரோனா பாதிப்பில் இருந்து விஜயகாந்த் மீண்டு விட்டதாகவும், ஆனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

Views: - 46

0

0