தனக்கு தானே சூனியம் வைத்துக் கொள்ளும் தேமுதிக..? 234 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்..!!

28 December 2020, 12:39 pm
Vijayakanth - updatenews360
Quick Share

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமனம் செய்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் அதிமுக – திமுக தலைமையிலான கட்சிகளுக்கு நேரடி போட்டி ஏற்பட்டாலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தலைமையில் 3வது அணி உருவாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளை கழற்றிவிடவும், தானாக கழன்று செல்லவும் சில கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதனால், எந்தக் கட்சிகள் எந்தக் கூட்டணியில் இருக்கப்போகிறது, இல்லை தனியாக போட்டியிடப் போகிறதா..? என்பது குறித்து தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் தற்போது அங்கம் வகித்து வரும் தேமுதிக, ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் திணறி வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி குழப்பத்தால் எந்த முடிவும் எடுக்காததால், வேறு வழியின்றி கொடுத்த சீட்டைப் பெற்றுக் கொண்டு, அதிமுக கூட்டணியுடன் இணைந்து போட்டி போட வேண்டியிருந்தது. மேலும், 2011ம் ஆண்டு அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்ட போது, எதிர்கட்சி என்ற அந்தஸ்தை பெறும் அளவிற்கு இடங்களை கைப்பற்றியது.

vijayakanth-updatenews360

ஆனால், இதற்கு நேர்மாறாக 2016 தேர்தல் முடிவுகள் இருந்தது. மாநில கட்சியின் அந்தஸ்தை இழக்கும் அளவிற்கு அதள பாதாளத்திற்கு சென்றது. எனவே, எதிர்வரும் தேர்தலில் மீண்டு வரவேண்டுமானால், பலமிக்க அதிமுக அல்லது திமுக கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மட்டுமே முடியும். ஆனால், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜய்காந்த், தனித்துப் போட்டியிடுவது உறுதி என்றும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தயாராகுமாறு கூறி வருகிறார். இது தேமுதிக கட்சி நிர்வாகிகளுக்கே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமனம் செய்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நடைபெறவுள்ள 2021 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்‌ நிறுவனத்தலைவர்‌, பொதுச்செயலாளர்‌ கேப்டன்‌ விஜயகாந்த்‌ அவர்கள்‌ 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும்‌ பொறுப்பாளர்கள்‌ முதல்‌ கட்டமாக இன்று முதல்‌ நியமனம்‌ செய்யப்படுகிறார்கள்‌. இவர்களுக்கு மாவட்டம்‌, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்‌, வார்டு, வட்டம்‌, ஊராட்சி, கிளை கழகம்‌, சார்பு அணி நிர்வாகிகள்‌ மற்றும்‌ கழக தொண்டர்கள்‌ என அனைவரும்‌ முழு ஒத்துழைப்பு
கொடுக்கவேண்டும்‌ என கேட்டுக்கொள்ளுகின்றேன்‌, எனத் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவின் இந்த அறிவிப்பு அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாகியுள்ளது. ஆனால், இந்த முடிவு சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்திற்கும் அதிகமான கூடுதல் சதவீத வாக்குகளை பெறுவதே கடினம் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

Views: - 1

0

0