விஜயகாந்த் ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் : பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!

24 September 2020, 7:58 pm
premalatha vijayakanth - updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தின் முன்பு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- 6 மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனைக்காக அழைத்து செல்வோம். அவ்வாறு அழைத்து செல்லும் போது, மிகச்சிறிய அளவில் தொற்று இருந்தது. அதற்கு உடனடியாக சிகிச்சை ஆரம்பித்து தற்பொழுது நலமுடன் இருக்கிறார். எங்கள் கருத்திலும் மருத்துவமனை தரப்பிலும் கொடுத்திலும் முரண்பாடு இல்லை. ஒரிரு தினங்களில் வீடு திரும்புவார்.

எங்கள் அண்டை வீட்டில் 7 பேருக்கு கொரோனா வந்ததில் நோட்டீஸ் ஒட்டினர். இங்கு விஜயகாந்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவரும் மருத்துவமனையில் உள்ளார். மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யவில்லை. நாங்கள் அரசின் வழிமுறைகளை முதலில் பின்பற்றுபவர்கள் நாங்கள்.

எனக்கே சந்தேகம் உள்ளது. ஒருவேளை அருகிலுள்ள வீட்டில் இருந்ததால் வந்திருக்கலாம். 1%சதவீதம் தொற்று இருந்தது. அதுவும் ஒரிரு தினங்களில் சரி செய்யப்படும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது அனைவருக்கும் தொற்று இல்லை. அடுத்த வாரத்திலிருந்து தனது வழக்கமான பணிகளை மேற்கொள்வார். அடுத்த வாரத்திலிருந்து ஆன்லைலில் அனைத்து மாவட்டங்களையும் தொடர்பு கொண்டு பேசுவார். அணிகள் கூட்டம், தேர்தல் பணிகள் என தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளோம்.

கட்சியின் 16ஆம் ஆண்டு விழாவில் கொடியேற்றினார். வேறு எங்கும் செல்லவில்லை. இது யாருக்குவேண்டுமென்றாலும் வரும். அதனால் நீங்களும் பாதுகாப்பாக இருங்கள். விஜயகாந்த் நலமுடன் உள்ளார் ஒரு பயமும் இல்லை. அவர் வீடு திரும்பியதும் ஆன்லைனில் கட்சி பணிகளை மேற்கொள்வார்.

தொலைபேசிய தொடர்புகொண்டு விரைவில் தொடர்பு கொண்டு விரைவில் நலம் பெற வாழ்த்திய முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர், அமைச்சர்கள், ரஜினி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. செயற்குழு டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும். அது தொடர்பான தேதியும், இடமும் பின்னர் இறுதி செய்யப்படும். செய்தியாளர் சந்திப்பு என்றால் நாங்கள் அழைக்கின்றோம், வாருங்கள். தேவையில்லாமல் ஊடகத்தினர் வீட்டின் வெளியே நிற்பதால் தர்மசங்கடமாக உள்ளது, என தெரிவித்துள்ளார்.

Views: - 12

0

0