அரசியல் நாடகம்தான்… இருந்தாலும் அவங்களுக்கு ஒதுக்கீடு கொடுக்கலாம் : வன்னியர் இடஒதுக்கீடு குறித்து விஜயகாந்த் கருத்து..!!

Author: Babu Lakshmanan
2 November 2021, 7:49 pm
vijayakanth - updatenews360
Quick Share

சென்னை : வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 உள்ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில்‌, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்‌ஒதுக்கீடு வழங்கி, கடந்த அதிமுக ஆட்சியில்‌ சட்டம்‌ இயற்றப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்‌ சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்‌ என கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டை நீதிமன்றம்‌ ரத்து செய்துள்ளது.

தேர்தலுக்காகவும்‌ கூட்டணிக்காவும்‌ மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக தேர்தலுக்கு முன்பே நான்‌ சொன்னது தற்போது உண்மையாகியுள்ளது. இருப்பினும்‌ 10.5 சதவீத உள்‌ஒதுக்கீட்டை நீதிமன்றம்‌ ரத்து செய்திருப்பது வன்னிய சமூக மக்களுக்கு பெரும்‌ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இட ஒதுக்கீடு விவகாரத்தில்‌ வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரீசிலனை செய்து, அனைத்து தரப்பு மக்களும்‌ பயன்‌ அடையும்‌ வகையில்‌ தீர்ப்பு வழங்க வேண்டும்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 451

0

0