விண்ணுலகில் கலாமுடன் பேசும் விவேக்… மரக்கன்றுகளை நடவு செய்வது பற்றி ஆலோசனை..!!! வைரலாகும் புகைப்படம்..!!!

17 April 2021, 8:16 pm
vivek tree 1 - updatenews360
Quick Share

நகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை விருகம்பாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

vivek - last - updatenews360

இதனிடையே, நடிகர் விவேக்கின் நினைவுகளை போற்றும் விதமாக, சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகளையும், புகைப்படங்களையும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விவேக் முழு உருவப்படத்திற்கு பின்பு, வானத்தில் மேகமூட்டங்களுக்கு இடையே ஒரு கல்லில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுடன் விவேக் பேசிக் கொண்டிருப்பது போன்ற ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்திற்கு, விண்ணுலகில் மரக்கன்றுகளை நடவு செய்வது பற்றி இருவரும் ஆலோசித்து வருவதாக கமெண்டுகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

முன்னதாக, மரக்கன்றுகளை அதிகம் அவர் நடவு செய்ததை உணர்த்தும் விதமாக, மரங்களுக்கு இடையே விவேக்கின் உருவம் வரையப்பட்டிருந்தது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Views: - 33

0

0