விஷாலின் ‘சக்ரா’ படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட இடைக்கால தடை : சென்னை உயர்நீதிமன்றம்

24 September 2020, 2:24 pm
chakra - updatenews360
Quick Share

சென்னை : நடிகர் விஷாலின் சக்ரா திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடியின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சக்ரா.
இவர்களுடன் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், திரைப்படங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொன்மகள் வந்தாள், பென்குயின் உள்ளிட்ட திரைப்படங்கள், திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்பையும் மீறி ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டது.

அந்த வகையில், விஷாலின் ‘சக்ரா’ படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட அப்படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், சக்ரா படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விஷாலின் ஆக்ஷன் பட நஷ்டத்திற்காக விஷால் கொடுக்க வேண்டிய ரூ. 8.3 கோடி பணத்திற்கான உத்தரவாதத்தை விஷால் தரப்பினர் வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, சிக்ரா படத்தை ஓ.டி.டி.க்கு விற்பனை செய்ய செப்.,30ம் தேதி வரை இடைக்கால விதிக்கப்படுவதாகவும், இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தது.

Views: - 9

0

0