அதிமுக தலைமையில் தேர்தல் களம் : பின்வாசலில் மோதும் திமுக..!

13 August 2020, 7:15 pm
stalin vs edappadi palanisamy - updatenews360
Quick Share

இந்திய ஜனநாயகம் தரமானது; அதே நேரத்தில் விசித்திரமானது. மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர்கள் மௌனமாக இருப்பதும், செல்வாக்கு இல்லாதவர்கள் ஆட்டம் போடுவதும் அரசியல் களத்தில் நாம் அன்றாடம் காணும் விளையாட்டு.
அதை ரசிக்க வேண்டுமே ஒழிய கவனத்துக்குரியது என எடுத்துக் கொள்ளக் கூடாது .

அந்த வகையில் பாஜகவின் தமிழக துணைத் தலைவர் விபி துரைசாமியின் பேட்டி அமைந்துள்ளது. அதில் மையமாக அமைந்த விஷயம் தமிழகத்தில் திமுக அதிமுக என்ற நிலை இருந்து வந்தது. இப்போது நிலைமை மாறியுள்ளது. அதாவது திமுக – பாஜக என்ற நிலை உருவாகியுள்ளது. என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை வெளியிட்டார்.

அது மட்டுமல்ல; பாஜகவை எந்த கட்சிகள் அணைத்து அனுசரித்து செல்கின்றனவோ, அவற்றோடு கூட்டணி; பாஜக தலைமையில் கூட்டணி என பாஜகவின் செல்வாக்கு தமிழகத்தில் அதிகரித்து விட்டது போன்ற பாவனையில் அவரது பேட்டி அமைந்து இருக்கிறது.

ஏற்கனவே திமுகவில் இருந்த விபி துரைசாமி திடீரென்று பாஜகவுக்கு வந்தது ஏன் என்கிற சந்தேகம் இப்போது வலுவாக எல்லோருக்கும் தொடங்கியுள்ளது. பாஜகவின் பலமும் பலவீனமும் தமிழகத்தில் எந்தளவுக்கு உள்ளது என்பதை தேசியத்தலைமையை உணர்ந்து இருக்கும்போது, இவர் ஏன் இப்படி ஒரு கருத்தை கிளப்புகிறார் என்கிற சந்தேகம் பரவலாக எல்லோருக்கும் எழுந்துள்ளது.

மு.க. ஸ்டாலினின் கைக்கூலியாக இவர் வேலைசெய்கிறாரோ என்கிற சந்தேகம் பரவலாக கிளம்பியுள்ளது.
தமிழக அரசு தமிழகத்துக்கு வேண்டிய விஷயங்களில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும், பிற விஷயங்களில் அடக்கமாக இருப்பதும் இவரைப் போன்றவர்களுக்கு பிடிக்காத விஷயம்.

இப்படி அதிமுகவை போட்டியில் இல்லை என்று சொல்வதன் மூலம் அதிமுகவின் கடுமையான எதிர்ப்பை கிளப்பி விடுவதன் மூலம், அதிமுக பாஜக இடையே பிளவை ஏற்படுத்துகின்ற முக ஸ்டாலினின் சதி, விபி துரைசாமியின் பேச்சில் தெரிகிறது.

பேட்டியில் நீண்ட காலமாக ஜாதியை சொல்லி அரசியல் செய்து விட்டதாக மு. க. ஸ்டாலின்மீது குற்றம்சாட்டுவதன் மூலம் தனக்கு ஒரு பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கி விட்டதாக விபி துரைசாமி கருதுகிறார். நாடாளுமன்றத்தில் பேசுவதை விட பொதுவெளியில் தான் அதிகம் திமுக எம்பிக்கள் பேசுகிறார்கள் என்று ஒரு அபத்தமான குற்றச்சாட்டு அவர் கிளப்புவது மூலம், திமுகவின் எதிர் நிலையில் இருப்பதாக நம்ப வைக்க முயற்சிக்கிறார்.

Edappadi palanisamy - updatenews360

ஆனால் அவரது செயல்பாடுகள் சந்தேகத்துக்கு உரியவை என்று கருதிய முதலமைச்சர் எடப்பாடி மிகவும் சாதுரியமாக அந்த விஷயத்தை கையாண்டார். பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த மு.க.ஸ்டாலின் புன்னகையோடு எதிர்கொண்ட எடப்பாடியின் புன்னகையில் புஸ்வானமாய் போனதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?