பாஜகவுக்கு கல்தா கொடுத்த முகுல் ராய் : மீண்டும் திரிணாமூல் காங்கிரசுக்கு தாவினார்…!!!

11 June 2021, 6:01 pm
mugul rao - updatenews360
Quick Share

மேற்கு வங்கம் : மம்தா பானர்ஜியின் வலது கரமாக இருந்து பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்த முகுல் ராய் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த அதிகாரத்தில் இருந்தவர் முகுல் ராய். இவர் கடந்த 2017ம் ஆண்டு, மம்தா பானர்ஜிக்கும், முகுல் ராயுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அத்துடன் மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்து விட்டு, பாஜகவில் இணைந்தார்.

இருப்பினும், முகுல் ராயுக்கு பாஜகவுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பேசப்படுகிறது. கட்சியின் மாநிலத் தலைவர் திலிப் கோஷ், தேசியச் செயலர் ராகுல் சின்ஹா ஆகியோரை கடந்து அவரால் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, மேற்கு வங்கத் தேர்தலில் வெற்றி பெற்று மம்தா பானர்ஜி மீண்டும் முதலமைச்சரானார். இதையடுத்து, முகுல் ராய் மற்றும் அவரது சுப்ரன்ஷு ராயுடன் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

Views: - 120

0

1

Leave a Reply