கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

By: Babu
14 October 2020, 1:36 pm
RAIN 1 - updatenews360
Quick Share

சென்னை : கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- கடந்த 9ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையை கடந்து, தற்போது கடலோர ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இதன் காரணமாக, நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் மழை பெய்யும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 186

0

0