மின் கட்டணக் கொள்ளைக்கு முடிவு எப்போ? பிரபல இயக்குனர் கொந்தளிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2021, 2:01 pm
Thangar Bachan - Updatenews360
Quick Share

தமிழ்த் திரைப்பட இயக்குனர் 60 வயது தங்கர்பச்சான் ஒளிப்பதிவாளர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.     

Thangar Bachan clarifies that he is not part of 'Maru Malarchi 2' | The  News Minute

தனது 30-வது வயதில் சினிமாவில் நுழைந்த அவர், பாரதிராஜாவுக்கு அடுத்து கிராமிய மணம் வீசும் படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்கும் உரியவர். மனதில் தோன்றுவதை பளிச்சென்று வெளிப்படையாக பேசக்கூடியவர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவதூறாக பேசியதை முதன்முதலில் கண்டித்த திரையுலக பிரமுகர் என்ற பெயரும் அவருக்கு உண்டு.

Maalaimalar News: Tamil News A Rasa Explain to misrepresented my speech

மத்திய அரசின் சினிமா ஒளிப்பதிவு சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக தங்கர்பச்சான் அறிக்கை வெளியிட்டதாக கடந்த மாத தொடக்கத்தில் சமூகவலைத்தளங்களில் பரபரப்பு செய்தி வைரல் ஆனது.

ஆனால் இதை முற்றிலுமாக மறுத்த தங்கர் பச்சான், தன் பெயரை பயன்படுத்தி வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் ஒன்றையும் அளித்தார்.

Thangar Bachan Writes To The Chief Minister Of Tamilnadu! | NETTV4U

மேலும் ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்தை, தான் ஆதரிக்கவில்லை என்றும் தான் ஆதரிப்பதாக சமூக வலைதளங்களில் தவறாக செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் அப்போது அவர் விளக்கம் அளித்தார்.

மேலும் நடிகர் ரஜினி, விஜய், அஜித் மூவரும் திரைப்பட ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது பற்றி தனது வருத்ததையும், கண்டனத்தையும் தெரிவித்தார். இச்சட்டத்துக்கு எதிராக அனைவரும் தொடர்ந்து குரல் கொடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

First Tamil Hero Record-Ajith Overtakes Rajini & Vijay

சமூக சார்ந்த பாதிப்பு என்று வரும்போதெல்லாம் எந்தவொரு விஷயத்திலும் அவர் தனது கருத்தை தெரிவிக்க தயங்கியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மின் வாரிய ஊழியர்கள் வீடு வீடாக சென்று மின் அளவீடு செய்யவில்லை. இதனால் மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஆகிய நான்கு மாதங்களுக்கும் சேர்த்து மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டுக்கும், கடைகள் அலுவலகங்களுக்கும் மின் கட்டணம் தாறுமாறாக வந்தது.

Tamil Nadu expects upto 1,000 MW drop due to PM Modi's '9 pm, 9 minutes'  call against COVID-19- The New Indian Express

வீடுகளுக்கு இரண்டு மூன்று மடங்கு கட்டணம் என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகி போனது. மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் வருமானத்தில் குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் அதிகபட்சமாக
25 சதவீதம் வரை மின் கட்டணம் செலுத்தும் அவல நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

தமிழகத்தில் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரர்கள் என்று அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டது, இந்த ஒரு விஷயத்தில்தான். மின் அளவீடு இடைப்பட்ட ஒரு மாதம் எடுக்காததன் விளைவு இது என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அதுவும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வேலை இழந்து வாழ்வாதாரம் பறி போனவர்களுக்கு, இந்த மின் கட்டணம் ஷாக் அடித்து வீழ்த்தாத குறைதான்.

இந்தப் பாதிப்புக்கு பிரபல இயக்குனர் தங்கர் பச்சானும் உள்ளாகி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. தனக்கு 4 மாத மின் கட்டணமாக பல ஆயிரம் ரூபாய்கள் வந்திருப்பது, அவரை கொந்தளிக்க வைத்துவிட்டது. இதனால் அவர் சுடச்சுட ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்.

Thangar Bachan affairs, Today Updates, Family Details, Biodata, Newlook,  wiki

அந்த அறிக்கைக்கு, ‘மின்சார கட்டண கொள்ளை முடிவுக்கு வருமா? முதலமைச்சர் மனம் இறங்குவாரா?’ என்று நாளிதழ் பாணியில் தலைப்பும் கொடுத்திருந்தார். அதில் ஒரு தனி மனிதனின் கோபம் வெளிப்பட்டது என்பதைவிட, ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரலாகவும் இருந்தது.

தங்கர் பச்சான் வெளியிட்ட அறிக்கையில் ‘அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில்தான் ஊதியங்களைப் பெறுகின்றனர். அதுவும் ஒரே ஒரு நாள் கூட தாமதமாகாமல்! ஆனால் மின்சாரக்கட்டண கணக்கெடுப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிக்கப்படுகின்றன.

மாதம் மாதம் கணக்கெடுத்திருந்தால் 16 ஆயிரம் மட்டுமே என் வீட்டிற்கு மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், கடந்த மாதத்தில் 36 ஆயிரம் ரூபாய் மின்சாரக் கட்டணமாக செலுத்தி இருக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கெடுக்கப்படுவதால் இரண்டேகால் மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது.

Tamil Nadu CM MK Stalin launches call centre to redress EB grievances- The  New Indian Express

திமுக தேர்தல் அறிக்கையில் இந்த மின்சாரக் கட்டணக்கொள்ளையை தடுக்கும் விதமாக மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வருவோம் என தேர்தலின்போது ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் அடுத்த மாத மின் கட்டணம் செலுத்தும் தேதியை எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கின்றேன்.

ஒரு வீட்டின் மின் கட்டண செலவே இவ்வளவு என்றால் மற்ற குடும்பச் செலவுகளை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியவில்லை. அடுத்த மின் கட்டணமும் இதேபோல் செலுத்தச் சொன்னால் அதற்கானத் திறன் தமிழ் நாட்டில் எத்தனைக் குடும்பங்களுக்கு இருக்கும் என்பதை முதலமைச்சர் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தொழில் வாய்ப்பின்றி, வேலை வாய்ப்பின்றி பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க இயலாமல் வருமானமின்றி தவித்துக் கொண்டிருக்கும் இம்மக்களுக்கு முதலமைச்சர் உடனடியாக மாதாந்திர மின் கட்டண முறையை அறிவித்து உதவ வேண்டுகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தங்கர்பச்சானின் இந்த அறிக்கையை படிக்கும்போது ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. எழுத்தாளர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் என்ற முத்திரைகளையும் அதில் பதித்து இருக்கிறார்.

மாதாமாதம் சம்பளம் வாங்கும் மின்வாரிய ஊழியர்கள் மின் கணக்கெடுப்பை மட்டும் 2 மாதங்களுக்கு ஒருமுறை எடுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்ற சபாஷ் கேள்வியையும் அவர் எழுப்புகிறார்

தன்னாலேயே இதுபோன்ற மின்கட்டணத்தை தாங்க முடியாத நிலையில், சாதாரண மக்களின் கதி என்ன? என்பதை அவர் நாசுக்காக குறிப்பிடுகிறார். அதுமட்டுமின்றி, அடுத்த முறை மின் கட்டணம் எவ்வளவு வருமோ? என்ற நியாயமான பயமும் அவரிடம் எழுகிறது.

SUPPLY, ERECTION, TESTING, COMMISSIONING MAINTENANCE OF 50 KWp ROOF TOP LT  GRID CONNECTED SOLAR PLANT AT Palavadi 400 KV SS, DEDC/Dharmapuri – The  Leading Solar Magazine In India

தேர்தலின்போது மாதா மாதம், மின் அளவீடு செய்வதாக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் அதை நிறைவேற்றாததால் தானும், தமிழக மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறோமே என்ற ஆதங்கமும் அவருடைய அறிக்கையில் வெளிப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில், மாதம்தோறும் மின் அளவீடு எடுக்கப்படும் என்பதும் ஒன்றாகும். இதனால் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதம்தோறும், 150 முதல் 200 ரூபாய் வரை மிஞ்சும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டது.

ஆனால் அதற்கு எதிர்மாறாக, மே மாதம் மின் அளவீடு எடுக்கப்படாததால் 1000 ரூபாய் கட்டணம் வந்த வீடுகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தும்படி கூறியதால் குடும்பத்தின் நிதி சுமை அதிகமாகிவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா கால வாழ்வாதார நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. சொன்னது போலவே அந்த பணத்தை கொடுத்தார்கள். பாராட்ட வேண்டிய விஷயம். ஆனால் அந்த பணம் முழுவதும் அப்படியே மின் கட்டணத்திற்கு போய்விட்டது.

அதாவது, இப்படி ஒரு பக்கம் கொடுப்பது போல் கொடுத்து விட்டு இன்னொருபக்கம் அப்படியே முழுவதையும் அரசு பறித்துக் கொண்டு விட்டது.

கொரோனா பரவலின்போது மின்வாரிய ஊழியர்கள், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றியும் வீடுகளுக்கு சென்று மின் அளவீடு செய்திருக்கலாம். ஆனால் ஊரடங்கை காரணம் காட்டி அவர்கள் தங்களுடைய பணியை செய்யவில்லை. அது மக்களுக்கு தண்டனை விதிப்பது போல் ஆகிவிட்டது.

அதுவும் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறிய மின் கட்டண கொள்ளை என்ற வார்த்தைகளை அப்படியே, தங்கர்பச்சான் தனது அறிக்கையில் கையாண்டிருக்கிறார்.
அதனால்தான், தங்கர்பச்சானும் மின் கட்டணக் கொள்ளை என்றே கூறியிருக்கிறார், போலிருக்கிறது. பொதுவாகவே திரையுலக பிரமுகர்களின் குரல் எளிதில் மக்களை சென்றடைந்துவிடும். அது அரசுகளின் காதுகளிலும் விழும் என்பதும் நிச்சயம்.

Tamil Nadu CM MK Stalin briefs ministers, asks them to work for development  - India News

ஏனென்றால் தங்கர்பச்சான் எளிய குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர். ஏழை மக்கள் படும் துயரத்தையும் அறிந்தவர். எனவே மின் கட்டண பாதிப்பு பற்றிய அவருடைய அறிக்கையை சாமானியனின் குரலாகவே தமிழக அரசு எடுத்துக்கொள்ளவேண்டும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாதாமாதம் மின் அளவீடு செய்து கட்டணம் செலுத்தும் முறையை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்” என்று
அவர்கள் வலியுறுத்தினர்.

Views: - 646

0

0