தடையை மீறி வேல் யாத்திரை நடத்தவுள்ள பாஜக: திருத்தணியில் போலீசார் குவிப்பு…!!

6 November 2020, 9:10 am
bjp 2 - updatenews360
Quick Share

திருத்தணியில் தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தவுள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் சென்னையில் இருந்து திருத்தணி செல்ல இருப்பதாக செய்தியார்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொருவருக்கும் தாங்கள் விரும்பும் கடவுளை வழிபட உரிமை உள்ளது.எனக்கு விருப்பமான முருகனை வழிபட திருத்தணி கோயிலுக்கு செல்ல உள்ளேன். அரசியமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே கோயிலுக்கு செல்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

இதனைதொடர்ந்து, பாஜகவின் வேல் யாத்திரையை தடுக்க திருத்தணியில் 6 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூரை சேர்ந்த 1010 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில் முக்கிய சந்திப்பில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முருகன் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் தடையை மீறி யாத்திரையை நடத்தவும், கைது செய்தால் மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Views: - 25

0

0