திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறதா? யாருக்கு கிடைத்த விருது?…சர்ச்சையில் சிக்கிய திமுக அரசு!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2022, 6:31 pm
TN Awards DMK -Updatenews360
Quick Share

தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வருவதை மத்திய அரசின் அமைப்புகள் வழங்கும் விருதுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

தமிழகத்திற்கு 3 விருதுகள்

கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சுகாதாரம், சட்டம்-ஒழுங்கு, நீர் மேலாண்மை ஆகியவற்றில் சிறந்த மேம்பாட்டுக்காக தேசிய அளவில் அடுத்தடுத்து 3 விருதுகளை தமிழகம் பெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழக அரசுக்கு 2 விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளது மத்திய அரசு!

முதலில் ‘நிதி ஆயோக்’ அறிவித்த பெரிய மாநிலங்களுக்கான சுகாதார தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் தமிழகம் இரண்டாமிடம் பிடித்திருந்தது. இது 2019-2020-ம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்ட விருதாகும். அதற்கு முந்தைய ஆண்டிலும் சுகாதார தரவரிசைப் பட்டியலில் தமிழகம் இதே இடத்தைப் பிடித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

மார் தட்டிய மா.சுப்பிரமணியன்

இந்த விருதை மத்திய அரசு அறிவித்த உடனேயே தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமணியம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரத் துறைக்கான தரவரிசை பட்டியலில், முதலமைச்சர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளது’ என்று பெருமிதத்துடன் கருத்து தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத்  தேவையில்லை -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா ...

ஆனால் அவருடைய மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இந்த தரவரிசையில், தமிழகம் இரண்டாமிடம் பெற்றது அதிமுக ஆட்சி காலத்தில் என்று அவருக்கு, தெரிய வந்ததும் அதுபற்றி பிறகு அவர் அதிகம் பேசுவதில்லை.

தமிழகத்திற்கு மேலும் ஒரு விருது

இந்த நிலையில்தான் இரண்டு வாரங்களுக்கு முன்பு 2020 -2021-ம் ஆண்டில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டதற்காக மத்திய அரசு இன்னொரு விருதை தமிழகத்திற்கு அறிவித்தது. உடனே சில முன்னணி தனியார் தொலைக்காட்சி செய்தி சேனல்கள் திமுக அரசின் சாதனை என்று பிரேக்கிங் நியூஸ் போட்டன. இந்த விருது, திமுக அரசுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களும் புகழாரம் சூட்டி அறிக்கை விட்டனர்.

Led by MK Stalin. The DMK, General Committee: Duraimurugan elected General  Secretary and DR Balu elected Treasurer || மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.  பொதுக்குழு: பொதுச்செயலாளராக துரைமுருகன் ...

முன்னணி செய்தியாளர்களில் சிலர் கூட, திமுக அரசு சட்டம் ஒழுங்கை மிகச் சிறப்பாக பராமரிப்பதற்காக மத்திய அரசிடம் விருது பெற்றிருக்கிறது என்று கருதி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இது தொடர்பாக கேள்வியும் எழுப்பினர். அதற்கு அவர் நெற்றியடியாக, “செய்தியாளர்கள் முதலில், விருது எந்தக் காலகட்டத்திலிருந்த ஆட்சிக்கு கிடைத்தது என்பதை பார்க்க வேண்டும் 2021 மார்ச் வரை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தது 2021 மே 7-தேதி. அப்படி இருக்கும்போது, திமுக ஆட்சியின் சாதனை என்று எப்படி இதைக் கூற முடியும்?…

ஸ்டிக்கர் ஒட்டிய திமுக

முந்தைய அரசின் சாதனைக்கு தற்போதைய திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பெருமை கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அது நியாயமானதும் அல்ல” என்று சுரீர் பதிலளித்து, அந்த செய்தியாளர்களுக்கு உண்மையை தெளிவுபடுத்தினார்.

தமிழகத்திற்கு 3வது விருது

இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு இன்னொரு கௌரவமும் கிடைத்தது. 2020-ம் ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலை மத்திய ஜல் சக்தி துறை அறிவித்தபோது, அதில் நீர்வளத் திட்டங்களை மிகச் சிறப்பாக செயல் படுத்தியதற்கான பிரிவில், தமிழகத்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுதொடர்பான புகைப்படம் ஊடகங்களிலும் வெளியானது. இது அதிமுக தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிமுக அரசுக்காக வழங்கப்பட்ட விருதுகள்

இதுபற்றி அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கூறும்போது, “சுகாதாரம், சட்டம்-ஒழுங்கு, நீர் மேலாண்மை ஆகியவற்றில் கிடைத்திருக்கும் விருதுகள் அதிமுக ஆட்சி கால சாதனைகள். அதற்கு திமுக தலைவர்கள் சொந்தம் கொண்டாடுவது விசித்திரமாக உள்ளது. இன்னொரு ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளுக்கு எதற்காக இவர்கள் ‘ஸ்டிக்கர்’ ஒட்டிக் கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை.

சிறப்பான செயல்பாடுகளுக்காக தமிழக அரசுக்கு 4 விருதுகள்: இந்தியா டுடே விருதை  முதல்வர் பெற்றார் | சிறப்பான செயல்பாடுகளுக்காக தமிழக ...

இந்த 3 பெரிய விருதுகளுமே அதிமுக ஆட்சி காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளுக்காக வழங்கப்பட்டவை என்று, விருது அறிவிக்கப்பட்ட ஆண்டை வைத்தே அறிந்து கொள்ள முடியும்.

கம்பி கட்டிய திமுக

முந்தைய அதிமுக அரசுக்கோ, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கோ இதில் எந்த விதத்திலும் புகழ் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக திமுக தலைவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது வெளிப்படை. அதை ஊடகங்களில் செய்தியாக வெளியிட வைப்பதன் மூலம், தங்கள் அரசுக்குத்தான் அந்தப் பெருமை கிடைத்தது என்று கம்பி கட்டவும் பார்க்கிறார்கள்.

தமிழக சட்டசபைத் தேர்தல் ரிசல்ட் 2021: திமுக கூட்டணி அமோக  வெற்றி...முதல்வராகிறார் மு.க ஸ்டாலின் | Tamilnadu election result: Full  details of DMK alliance and AIADMK alliance ...

அதிலும் மிகக் குறிப்பாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்,
இப்படி சொல்வதில் முன்னணியில் இருக்கிறார். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி ஏழை மாணவர்களுக்கு மிகக் குறைந்த அளவில் இடம் கிடைத்து வந்ததை கருத்தில் கொண்டு முந்தைய அதிமுக அரசு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை சட்டமாக இயற்றி அதற்கு மத்திய பாஜக அரசின் ஒப்புதலையும் பெற்றது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்த கட்-ஆப் மதிப்பெண்கள் எடுத்தாலே, மருத்துவ படிப்பில் சேர்வதற்கு இடமும் கிடைத்தது.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த திமுக

அதன்படி கடந்த ஆண்டு 237 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்கும் வாய்ப்பையும், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்மருத்துவம் படிக்கும் வாய்ப்பையும் பெற்றனர். அப்போது மா. சுப்பிரமணியம் அதிமுக அரசுக்கு திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டு அதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு இடம் கிடைத்தது என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் சொன்னார். அதிமுக தலைவர்கள் தொடர்ந்து இதை மறுத்து வந்ததாலும் கூட அவர் இப்படி சொல்வதை இன்னும் நிறுத்தவில்லை.

தொகுதிப் பங்கீடு பேச்சை தொடங்காத திமுக; ஸ்டாலின் வியூகம் தெரியாமல்  தவிக்கும் கட்சிகள்: 170 தொகுதிகளில் போட்டியிடுவதில் உறுதியாக ...

ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லும்போது அந்த பொய் உண்மையாகி விடும் என்ற கோயபல்ஸ் பிரச்சாரப் பணியில் திமுக இப்படி நடந்து கொள்வதுபோல் தெரிகிறது.

அதுமட்டுமல்ல நீட் தேர்வால் எழுந்த சர்ச்சையால், தமிழகத்தில் மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், அரசு பள்ளி ஏழை மாணவர்கள் அதிக அளவில் மருத்துவம் பயிலவேண்டும் என்ற நோக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பாஜக அரசிடம் 11 அரசு மருத்துவ கல்லூரிகள் கட்ட அனுமதி கோரி, அதற்கு பிரதமர் மோடி மூலம் அதிமுக அரசு ஒப்புதலும் பெற்றது. அந்த 11 கல்லூரிகளும் அதிமுக ஆட்சி காலத்திலேயே கட்டி முடிக்கப்பட்டும் விட்டன.

Junior Vikatan - 21 February 2021 - கைகோத்த மோடி! - கைவிடப்பட்டாரா சசி? |  special story about modi Tamil Nadu visit - Vikatan

இந்த மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக தமிழக மாணவர்களுக்கு மட்டும் 1450 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்கும். அந்த கல்லூரிகளைத்தான் பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.

இந்த கல்லூரிகளை அமைத்ததில் மத்திய பாஜக அரசுக்கும், முந்தைய அதிமுக அரசுக்கும்தான் பெருமை போய்ச் சேரவேண்டும். இந்திய மருத்துவக் கவுன்சில் இந்த 11 மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கும் நேரத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

மருத்துவ கல்லூரி கட்டிடம்

ஆனால் அமைச்சர் சுப்பிரமணியம், திமுக ஆட்சி காலத்தில்தான், இந்த மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதுபோல தற்போது கூறி வருகிறார். ஊடகங்களும் இதை அப்படியே வெளியிடுகின்றன. செய்தியாளர்கள் மறந்தும் கூட இந்த மருத்துவக்கல்லூரிகள் அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதுதானே என்று அவருக்கு நினைவூட்டுவதும் கிடையாது.

150 இடங்களுடன் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கரூர் அரசு மருத்துவ கல்லூரி  திறப்பு: முதலாமாண்டு வகுப்புகளை தொடங்கி வைத்தார் முதல்வர் | karur medical  ...

அதிமுக அரசின் சாதனைகளை, தாங்கள் செய்ததுபோல காட்டிக் கொள்வதும், ஏதாவது குறைபாடு என்றால் முந்தைய அரசுதான் இதற்கு காரணம் என்று அப்படியே அதிமுக மீது பழி போடுவதும் திமுகவின் வாடிக்கையாகி விட்டது.

கடந்த 2019, 2020-ம் ஆண்டுகளில் ஸ்டாலின், ஒவ்வொரு ஊராக சென்று, அதிமுக அரசுக்கு எதிராக பிரச்சாரம் அல்லவா செய்துகொண்டிருந்தார்?… அவர் அப்போது எதிர்கட்சித் தலைவர். யாரும் கேட்க மாட்டார்கள் என்பதற்காக, என்ன வேண்டுமானாலும் புளுகக் கூடாது” என்று அதிமுகவின் அந்த மூத்த நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.

Views: - 512

2

0