வேளாண் மசோதாக்களை முதலமைச்சர் பழனிசாமி ஆதரிக்க இதுதான் காரணம் : அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம்..!
25 September 2020, 11:31 amசென்னை : வேளாண் மசோதாக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆதரவு அளிப்பது ஏன்..? என்பது குறித்து அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அண்மையில் 3 வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாவிற்கு பஞ்சாப், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களையும் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் நடத்தி வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரையில் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால், தமிழக அரசு இந்த சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், 3 வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பு இல்லை. இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு பலனளிக்கக் கூடியது என்பதால் தான் முதலமைச்சர் பழனிசாமி அவற்றை ஆதரிக்கிறார், எனத் தெரிவித்தார்.