அதிமுகவில் இருந்து ஏன் வெளியேறினேன்? ஈபிஎஸ் முன் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உருக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2021, 8:16 pm
Nainar Nagendran -Updatenews360
Quick Share

நெல்லை : அதிமுக என்ற சரித்திரக் கட்சியில் இருந்து நான் ஏன் வெளியேறினேன் என்பது எனக்கு தெரியவில்லை என பாஜகு எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வருத்தத்தை பதிவு செய்தார்.

நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நெல்லை ஹைக் கிரவுண்ட் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். மேலும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார் தளவாய் சுந்தரம் கடம்பூர் ராஜு உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும் எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் பேசுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காட்டாற்று வெள்ளம் அதிலிருந்து வெளியேறி பல கட்சிகளில் நான் உட்பட பலர் இணைந்துள்ளோம்.

அதிமுக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்சி இதிலிருந்து நான் ஏன் வெளியேறினேன் என்று கேட்டால் அது தெரியவில்லை எது எப்படி இருந்தாலும் அதிமுக வாழ வேண்டும் வளர வேண்டும் அதற்கான முழு அக்கறை எனக்கு உள்ளது என்று பேசினார்.

Views: - 228

0

0