அடையாறு ஆனந்தபவன் மீது திடீர் எதிர்ப்பு ஏன்? ட்ரெண்டாகும் #BoycottA2B… ட்விஸ்ட் வைத்த திமுக எம்பி.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
21 அக்டோபர் 2023, 1:32 மணி
A2B - Updatenews360
Quick Share

அடையாறு ஆனந்தபவன் மீது திடீர் எதிர்ப்பு ஏன்? ட்ரெண்டாகும் #BoycottA2B… வைரலாகும் வீடியோ!!

அடையார் ஆன்நத பவன் முன்னணி சைவ உணவகங்களில் ஒன்றா தமிழகத்தில் இயங்கி வருகிறது. A2B என்று அழைக்கப்படும் இந்த சைவ ஓட்டல் தமிழகம் அல்லாது பல மாநிலங்களில் விரிவடைந்துள்ளது.

இந்த நிலையில் அடையார் ஆனந்த பவனின் உரிமையாளர் ஸ்ரீனிவாச ராஜா சமீபத்தில் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.

அந்த பேட்டியின் போது சித்ரா லட்சுமணன், “ஒரு காலத்தில் இந்த சைவ உணவக தொழில் என்பது ஐயர்கள் கையில்தான் பெரும்பாலும் இருந்தது. அதன் பிறகுதான் மெல்ல மெல்ல மாறுதல் ஏற்பட்டது. எப்படி இந்த மாற்றம் நடந்தது?” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த A2B உரிமையாளர் ஸ்ரீநிவாச ராஜா, “யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம் என்ற நிலை வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் தான்.

அவர் தான் குலத்தொழில் முறையை மாற்றிக் காட்டியவர், எந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என சொன்னார். இப்படி அந்த வீடியோவில் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து ஸ்ரீனிவாச ராஜாவின் பேச்சு குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. அவரது கருத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.

ஆனால் இந்துத்துவா ஆதரவாளர்கள் A2B உணவகத்தை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி எக்ஸ் சமூக வலைதளத்தில் #BoycottA2B ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

யாருமே எதிர்பார்க்காத வகையில் திமுக எம்பி கனிமொழி இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து ஏ2பி உரிமையாளருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து உள்ளார். “உண்மையை பேசியதற்கு நன்றி.” என குறிப்பிட்டு உள்ள அவர், A2B உணவகத்தில் சாப்பிடுவோம் என்ற அர்த்தம் தரும் விதமாக #WillEatAtA2B என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டு உள்ளார். உடனே அந்த ஹேஷ்டேக்கை பலரும் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

  • Tamilisai Thirumavalavan தரம் தாழ்ந்த விமர்சனமா? தப்பாக இருந்தால் வருந்துகிறேன்.. திருமாவளவன் திடீர் பல்டி!
  • Views: - 691

    1

    0