புத்துயிர் பெறுமா ஃபோர்டு நிறுவனம்? அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2021, 8:46 am
Ford Stalin - Updatenews360
Quick Share

சென்னையில் மரபணு ஆய்வகத்தை இன்று திறந்து வைக்கும் முதலமைச்சர் ஃபோர்டு நிறுவனம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் டெல்ட்டா பிளஸ் வைரஸை கண்டறியும் ஆய்வகத்தை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், ரூ.4 கோடி செலவில் சென்னையில் மரபணு ஆய்வகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த மரபணு ஆய்வகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் இன்று திறந்து வைக்க உள்ளார்.இந்த ஆய்வகம் மூலம் டெல்டா, டெல்டா ப்ளஸ் வைரஸ் வகைகளை விரைவில் கண்டறியலாம். பெங்களூருவில் பயிற்சி பெற்ற 5 வல்லுநர்கள் சென்னை ஆய்வகத்தில் வைரஸ் மாதிரிகளை கண்டறிய உள்ளனர்.

இதைத்தொடர்ந்து நஷ்டம் காரணமாக இந்தியாவில் இரண்டு ஆலைகளை மூட உள்ளதாக அறிவித்துள்ள ஃபோர்டு நிறுவனத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தலைமை செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இரண்டு ஆலைகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஃபோர்டு நிறுவனமும் மூடப்பட உள்ளது. நஷ்டம் காரணமாக மூடப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இறக்குமதி மூலம் இந்தியாவில் கார் சேவைகள் தொடரும் என்றும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஃபோர்டு நிறுவனம் மூடப்பட்டால் தமிழகத்தில் அந்நிறுவனத்தில் பணிபுரியும் பலர் வேலைஇழக்க கூடும் அபாயம் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

Views: - 106

0

0