இருளில் மூழ்குமா, தமிழகம்?…நிலக்கரி தட்டுப்பாடால் ‘திக் திக்’!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2021, 8:23 pm
Cm Stalin Coal Power-Updatenews360
Quick Share

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த ஒரு சில வாரங்களில் அதாவது கடந்த மே மாத இறுதியில் மாநிலம் முழுவதும் பரவலாக 3 முதல் 5 மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டது. அப்போது அதற்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய மின்மாற்றிகளையும், மின்கம்பங்களையும் சீரமைக்கும் பணி நடைபெற்று தற்போது வருவதாகவும் ஒருமாதத்துக்குள் நிலைமை சீராகி விடும் என்று உறுதியளித்தார்.

அணிலும், மின்வெட்டும்

அவர் சொன்ன காலக்கெடுவுக்கு பிறகும் மின்வெட்டு நீடித்ததால் அதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் “மின்மாற்றிகளில் அணில்கள் ஓடி விளையாடுவதால் மின்தடை ஏற்படுகிறது. சென்னையில் புதைவட கம்பிகளை பெருச்சாளிகள் கடிப்பதால் திடீர் மின்தடை ஏற்படுகிறது” என்று விளக்கம் அளித்தார்.

மின்தடைக்கு அணில் காரணம் என்றாரா ? உண்மை என்ன? - You Turn

இதுகுறித்து பலரும் வலைத்தளங்களில் கேலி பேசியபோது அதற்கு ஆதாரமாக சில புகைப் படங்களையும் அவர் வெளியிட்டார். அதில் சில உண்மைகள் இருந்தாலும் கூட மாநிலம் முழுவதும் அணில்கள் மின்மாற்றிகளிலும் மின்கம்பங்களிலும் எந்த நேரமும் ஓடுகின்றனவா? என்ற எதிர் கேள்வியும் மின்துறை அமைச்சரை திக்குமுக்காட வைத்தது.

தொடரும் மின்வெட்டு

இதெல்லாம் தீவிரமான விஷயமாக இல்லை என்றாலும் கூட தற்போது உண்மையிலேயே தமிழ்நாட்டில் தினமும் பல மணி நேரம் மீண்டும் மின்வெட்டு ஏற்படலாம் என்கிற ஒரு புதிய அபாயம் உருவாகி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் நிலக்கரி பற்றாக்குறை என்பதுதான்.

அணு உலை ஒளிர்ந்தால் மின்வெட்டு ஒழியுமா? « Siragu Tamil Online Magazine, News

நிலக்கரி பற்றாக்குறை

தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு மத்திய, மாநில மற்றும் தனியார் மின் நிலையங்கள் மூலம் தினமும் 13 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

Power outage threat: Govt, coal producers on war footing over fuel shortage  - The Financial Express

இதில் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் எண்ணூர், தூத்துக்குடி, நெய்வேலி, மேட்டூர், வல்லூர் ஆகிய இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களில் 4,320 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதுதவிர காற்றாலை, சூரிய ஒளி சக்தி, தாவரக் கழிவு மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் 8400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் உள்ளது. இதில் காற்றாலை மூலம் மட்டும் அதிகபட்சமாக 7,500 மெகாவாட் கிடைக்கும்.

மொத்த மின் உற்பத்தியில் கிட்டத்தட்ட 25 சதவீத மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலம் கிடைத்து வருகிறது. இந்த மின்சாரம் மாநிலம் முழுவதும் சுமார் 6 மணி நேர தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும். ஏற்கனவே மாநிலத்தின் மொத்த மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட் என்ற நிலையில் 13 ஆயிரம் மெகாவாட்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

மழை காரணமாக நிலக்கரி உற்பத்தி பாதிப்பு

இந்த நிலையில்தான் வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் பருவ மழை காரணமாக நிலக்கரி சுரங்கங்களில் நீர் புகுந்து இருப்பதால், நிலக்கரி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டிய நிலக்கரியின் அளவு 30% முதல் 35% வரை குறைந்து இருக்கிறது. அதேநேரம் இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் நிலக்கரியின் விலை சர்வதேச சந்தையில் கடுமையாக அதிகரித்துள்ளது.

Reserves exhausted early, Chhattisgarh coal mine seeks larger forest area |  Latest News India - Hindustan Times

காற்றாலை உற்பத்தியும் குறைந்தது

இதனால் உரலுக்கு ஒரு பக்கம் அடி, மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பதுபோல அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கிடைப்பதில் இரட்டை சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இன்னும் 4 நாட்களுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்ய தேவைப்படும் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தமிழகத்தில் மழைக்காலம் என்பதால் காற்றாலை மின் உற்பத்தியும் 70% வரை குறைந்துவிட்டது, என்கின்றனர்.

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு- அனல் மின்நிலையங்களில்  உற்பத்தி குறைப்பு || increase in wind power generation in the tamilnadu  Production reduction in thermal ...

ஓபிஎஸ் கூறிய தகவல்

இந்த இரு தகவல்களும்தான் தமிழக மக்களை பீதியடைய வைத்துள்ளது. இதுகுறித்து சட்டப் பேரவை அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில்,
“தமிழகத்தில் உள்ள அனல்‌மின் நிலையங்களில்‌ 4 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில்‌ உள்ளதாகவும்‌, கடந்த செப்டம்பர்‌ மாதம்‌ முதல்‌ இந்திய நிலக்கரி நிறுவனத்திடமிருந்து பெறப்படும்‌ அளவு குறைந்து வருவதாகவும்‌, தமிழ்நாட்டின்‌ தினசரி நிலக்கரி தேவை 62 ஆயிரம் டன்‌ என்றிருக்கின்ற நிலையில்‌, 60% நிலக்கரிதான்‌ தமிழ்நாட்டிற்கு அனுப்பப்படுகிறது என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

OPS absence at CM meet sparks speculations of Dharmayutham 2.0 - DTNext.in

மேலும் சர்வதேச சந்தையில்‌ நிலக்கரி விலை உயர்ந்ததன்‌ காரணமாக, ஏற்கனவே நீண்டகால மற்றும்‌ நடுத்தரக் கால ஒப்பந்தம்‌ செய்து கொண்ட நிறுவனங்களும்‌ தங்களது உறுதிமொழியை நிறைவேற்றாத சூழ்நிலையில்‌ இருப்பதாகவும்‌, நிலக்கரிப் பற்றாக்குறை காரணமாகத் தமிழகத்தில் உள்ள தனியார்‌ அனல்‌மின்‌ நிலையங்கள்‌ மற்றும்‌ கூட்டு முயற்சியுடன்‌ தொடங்கப்பட்ட அனல்‌மின்‌ நிலையங்கள்‌ பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்‌, தற்போதைய நிலைமை ஐயத்திற்கு இடமளிக்கக் கூடியதாக இருப்பதாகவும்‌, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகம்‌ தினசரி 64 ஆயிரம் டன்‌ நிலக்கரி அனுப்பப்பட வேண்டும்‌ என்று மத்திய அரசின்‌ நிறுவனத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும்‌, 20 ஆயிரம் டன்‌ நிலக்கரி குறைவாக மத்திய அரசின்‌ நிறுவனத்தால்‌ அனுப்பப்படுவதாகவும்‌ செய்திகள்‌ வந்துள்ளன.

குறையும் நிலக்கரியின் இருப்பு

இதன் காரணமாக, அனல்‌மின்‌ நிலையங்களில்‌ உள்ள நிலக்கரியின்‌ இருப்பு நாளுக்கு நாள்‌ குறைந்து வருகிறது. இது மிகவும்‌ கவலை தரும் ஒன்று.

Even the Dirtiest Coal Is Surging Due to China's Power Crunch - Bloomberg

இதே நிலைமை நீடித்தால்‌, தமிழ்நாட்டில்‌ ஆங்காங்கே மின்‌வெட்டு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு, பொதுமக்கள்‌ கடுமையாக பாதிக்கப்படுவதுடன்‌, இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்ற தமிழகத்தின் பொருளாதாரமும்‌ வீழ்ச்சி அடையக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டு அனைத்துப்‌ பொருட்களின்‌ விலையும்‌ உச்சத்தைத் தொடக்கூடிய நிலைமை ஏற்படும்‌. இந்த நிலைமையைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும்‌, பொறுப்பும்‌ மாநில அரசிற்கு உண்டு.

கவனம் கொள்வாரா முதல்வர்?

எனவே, தமிழக முதலமைச்சர் இப்‌ பிரச்சினையில்‌ தனிக்‌ கவனம்‌ செலுத்தி, மத்திய அரசின்‌ நிலக்கரித்‌ துறை அமைச்சருடன்‌ உடனடியாக தொடர்பு கொண்டு, தமிழகத்துக்குத் தேவையான நிலக்கரி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்”‌ என்று கூறியுள்ளார்.

Tamil Nadu CM-elect Stalin gets home portfolio as DMK issues list of 34  ministers - Hindustan Times

தமிழகத்தில் மின்வெட்டு வராது

அதேநேரம் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியோ தமிழகத்தில் எத்தகைய சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது என்று உறுதியாக கூறுகிறார். “தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இருந்தாலும் மின் வெட்டு ஏற்படாது.

About 2.38 lakh tonnes coal found missing during verification, alleges TN  electricity minister | Cities News,The Indian Express

தமிழக அரசின் அனல் மின் நிலையங்களில் இந்த தட்டுப்பாடு இல்லை. தமிழக அரசுக்கு மின்சாரம் விநியோகம் செய்யும் தனியார் நிறுவனங்களுக்குதான் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மின் வினியோகத்தை தனியார் நிறுவனங்கள் 50 சதவீதம் வரை குறைத்து விட்டன. அரசு மின் நிலையங்களில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சமூக ஆர்வலர்கள் கருத்து

சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “இந்திய அனல் மின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள கடும் நிலக்கரி தட்டுப்பாடு, பல்வேறு தொழில் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. நாட்டில் உள்ள 135 அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி பங்களிப்பு சுமார் 60 சதவீதம்.பொதுவாக மின் உற்பத்தி தேவைக்காக, 14 நாட்களுக்கான நிலக்கரி இருப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது 41 அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பே இல்லை. மேலும் 26 நிலையங்களில் ஒரு வாரத்துக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது.

கோல் இந்தியா

‘கோல் இந்தியா’ நிறுவனம்தான், நிலக்கரியை வெட்டியெடுத்து, அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பும் பணியை செய்து வருகிறது. அந்நிறுவனம் இந்த மாத மத்தியில் இருந்து உற்பத்தியை தினமும், 17 லட்சம் டன்னில் இருந்து 19 லட்சம் டன்னாக உயர்த்த திட்டமிட்டு உள்ளது.

Coal India Limited: Apply Online For 1,326 Management Trainee (MT) Posts In  Multiple Disciplines - Careerindia

இப்படி உற்பத்தி அதிகரித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிலக்கரியை சீராக விநியோகம் செய்தால் மின் உற்பத்தியை 25 சதவீதம் வரை அதிகரிக்கலாம்” என்றனர்.

எது எப்படியோ, தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தினமும் 16 முதல் 18 மணி நேர மின்வெட்டு என்ற பூதம் மீண்டும் வந்து விடாமல் இருந்தால் சரி! ஏனென்றால் அதை இப்போது நினைத்தாலும் கூட வயிற்றில் புளியைக் கரைக்கிறது!

Views: - 441

0

0