கண்ணீரிலும் கைக்கொடுத்த தமிழிசை.. நள்ளிரவில் புதுச்சேரி பெண்ணிடமிருந்து வந்த ட்விட்.. உடனே உதவி செய்த ஆளுநர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2021, 4:51 pm
Tamilisai - Updatenews360
Quick Share

புதுச்சேரி : வென்டிலேட்டர் கூடிய சிகிச்சைக்காக ஆளுநர் தமிழிசைக்கு டிவிட்டரில் உதவி கேட்ட பெண்ணுக்கு உடனே உதவி செய்ததற்கு பெண்ணின் குடுமபத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தெலுங்கான ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் சமீபத்தில் காலமனார். இதையடுத்து அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதுவையில் இருந்து சென்னை சென்றார்.

தற்போது சென்னையில் உள்ள அவருக்கு புதுச்சேரி மகாத்மாக காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், நேற்று முன்தினம் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தேவைப்பட்டது.

இந்த நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் டிவிட்டர் மூலம் ஆளுநர் தமிழிசைக்கு நேற்று இரவு கோரிக்கை விடுத்தனர். இதை பார்த்த அவர் உடனே சுகாதாரத்துறை செயலாளர் அருண் என்பவரை தொடர்பு கொண்டு பெண்ணுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த பெண்ணுக்கு சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார். நள்ளிரவில் பெண் வெண்டிலேட்டருடன் கூடிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்த ஆளுநர் தமிழிசைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தாயார் இறந்த துக்கத்தில் சென்னையில் உள்ள தமிழிசை டிவிட்டரில் பெண் கேட்ட உதவிக்கு உடனே சுறுசுறுப்பாக உதவி செய்து கைகொடுத்த நெகிழ்வை கண்டு பெண் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Views: - 630

1

0