‘பட்டா மாற்றம் செய்ய ரூ.13 ஆயிரம் லஞ்சம்’…கையும் களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்: உதவியாளருடன் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..!!

Author: Rajesh
27 April 2022, 10:14 pm
Quick Share

தாம்பரம்: தாம்பரம் அருகே ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் திருவஞ்சேரியை சேர்ந்தவர் பியூலா சார்லஸ். இவர் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய திருவஞ்சேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் தீபா மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் தனலட்சுமி ஆகியோர் பட்டா பெயர் மாற்றம் செய்து தர ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டு கடைசியாக 13 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பட்டா வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

தாம்பரம் அருகே ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது...!

லஞ்சம் கொடுக்க விரும்பாத பியூலா சார்லஸ் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை செங்கல்பட்டு பிரிவு அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்பது குறித்து புகார் செய்தார். இது தொடர்பாக போலீஸ் டிஎஸ்பி சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.

இதன்படி பியூலா சார்லஸ் திருவஞ்சேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச பணம் ரூ.13 ஆயிரத்தை கிராம நிர்வாக உதவியாளர் தனலட்சுமியிடம் கொடுத்துள்ளார். அப்போது திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக இருவரையும் பிடித்து லஞ்ச பணம் ரூ.13 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Views: - 933

1

0