பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது உயருகிறது..! மறுபரிசீலனைக்கு குழு : பிரதமர் மோடி தகவல்..!

15 August 2020, 12:46 pm
Modi independence day - updatenews360
Quick Share

டெல்லி : பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்துவது குறித்து மறுபரிசீலனை செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றினார். இதைத் தொடர்ந்து, நாட்டு மக்களுககு அவர் உரை நிகழ்த்தினார்.

அவர் பேசியதாவது :- பெண்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி இந்தியாவை வலிமையாகவும், பெருமையடையவும் செய்து வருகின்றனர். சுய வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பில் பெண்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க நாடு உறுதிபூண்டுள்ளது.

நிலக்கரி சுரங்கப்பணிகளிலும் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். நமது மகள்கள் (பெண்கள்) போர் விமானங்களையும் ஓட்டி, வானத்தையும் தொடுகின்றனர். நமது மகள்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் உரிய முடிவு செய்யப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.