எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ‘செக்‘: மத்திய அரசின் அனுமதியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2021, 8:04 pm
ennore Thermal Power -Updatenews360
Quick Share

சென்னை : எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதி 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் 600 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை மேலும் 4 ஆண்டுகள் அனுமதி வழங்கியது.

இது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்காமல் மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியதை எதிர்த்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு விசாரித்தது.

அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை கடந்த 2019 ஆம் ஆண்டு வழங்கிய அனுமதியை நிறுத்தி வைக்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் எண்ணூர் அனல் மின் நிலையம் தொடர்பாக இன்னும் 2 மாதங்களில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

Views: - 124

0

0