மைக்கை நீட்டும் போதெல்லாம் பேட்டி கொடுக்க முடியாது : அண்ணாமலை அதிரடி முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2024, 5:16 pm
Cheat
Quick Share

இனி செய்தியாளர்கள் ஓடிவந்து மைக்கை நீட்டும் நேரத்தில் எல்லாம் பேட்டி கொடுக்க முடியாது. பேட்டி கொடுக்க தேவை ஏற்பட்டால் முறைப்படி தலைமையில் இருந்து தகவல் 24 மணி நேரத்திற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என கோவை விமான நிலையத்திலிருந்து வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கழிப்பிடத்திலிருந்து வரும் சமயம் ,விமான நிலையத்திலிருந்து வரும் சமயத்தில் வந்து இனிமேல் மைக் நீட்ட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

ஏனென்றால் விமான பயணத்தில் பொழுது நடந்த சம்பவங்கள் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, எனவே இனிவரும் நாட்களில் முறையாக தலைமையிலிருந்து அனுமதி வந்தால் மட்டுமே செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க: தளபதியின் வருகையால் 2026ல் கொடியும், கோட்டையும் நொடியில் மாறும் : விஜய் ரசிகர்கள் மெசேஜ்!

எப்பொழுதும் கடந்த நாட்களில் செய்தியாளர்களை பார்த்தவுடன் ஓடி வந்து பேட்டி அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் அண்ணாமலை. இன்று அவரது பேச்சு விரக்தியின் உச்சம் போல் தோன்றியதாக செய்தியாளர்கள் கருதுகின்றனர்.

டெல்லியில் என்ன நடந்திருக்கும் என்பது குறித்து இனிவரும் நாட்களில் தெரிய வரலாம்.

Views: - 132

0

0