காரில் தொங்கியபடி அலப்பறை செய்த இளைஞர்கள்… மருது பாண்டியர்களின் குருபூஜையின் போது அட்டகாசம்!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
28 October 2021, 7:38 pm
car circus - - updatenews360
Quick Share

சாலையில் சென்ற ஒரு காரில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தொங்கியபடி சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் 220வது குருபூஜை விழா நேற்று யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. அவர்களின் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், இந்த குருபூஜை விழாவுக்கு செல்லும் சில இளைஞர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, இரு கார்களில் வரும் அவர்கள், கார்களுக்கு மேலே, முன்னும், பின்னும் தொங்கியபடி செல்கின்றனர். ஒவ்வொரு காரிலும் சுமார் 20 இளைஞர்கள் தொங்கியபடி செல்வதோடு, ஜிக் – ஜாக்காக வாகனத்தை இயக்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இது பார்ப்போதை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இதுபோன்ற அச்சுறுத்தலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 252

0

0