டிரில்லிங் மெஷினில் மறைத்து வைத்து தங்கம் கடத்திய விமானப் பயணி… மடக்கி பிடித்த அதிகாரிகள்… ரூ.18 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்..!!

Author: Babu Lakshmanan
9 June 2022, 9:15 am
Quick Share

திருச்சி விமான நிலையத்தில் துளையிடும் மிஷினில் மறைத்து கடத்தி வரப்பட்ட
18.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் துபாய், சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் இருந்து விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில்வந்த பயணிகளின் உடைகளை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடந்துகொண்ட ஒரு நபரின் உடமைகளை சோதனை மேற்கொண்டனர். அப்போது சிறிய அளவிலான துளைபோடும் கிரைண்டர் மிஷனில் உருளை வடிவில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். தங்கத்தை எடுத்து வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிப்பட்ட 349 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.18.4 லட்சம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Views: - 531

0

0