அவசரத்திற்கு கைக்கொடுக்கும் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் கம கமக்கும் பருப்பு பொடி!!!

Author: Hemalatha Ramkumar
10 April 2022, 7:24 pm
Quick Share

ஆத்திர அவசரத்திற்கு சட்னி, குழம்பு இல்லாத சமயத்தில் நமக்கு கைக்கொடுப்பது பருப்பு பொடி தான். பலரது சமையல் அறையில் இது நிச்சயமாக காணப்படும் ஒன்று. ஆனால் இந்த பருப்பு பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் வகையில் அதனை செய்து வைப்பது முக்கியம். அந்த ரெசிபியை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள்:
பூண்டு
மிளகு
சீரகம்
துவரம் பருப்பு
பெருங்காயம்
பொட்டுக்கடலை
காய்ந்த மிளகாய்
உப்பு

செய்முறை:
*ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பூண்டு போட்டு வறுத்து கொள்ளவும்.

*எண்ணெய் எதுவும் சேர்க்க கூடாது.

*பூண்டு வறுப்பட்டதும் அதில் துவரம் பருப்பு சேர்த்து வதக்கி எடுக்கவும்.

*அடுத்து மிளகு, சீரகம் மற்றும் காய்ந்த சேர்த்து வறுக்கவும்.

*சூடாக இருக்கும் கடாயில் பெருங்காயம் சேர்த்து வதக்கி அதையும் தனியாக எடுத்து வைக்கவும்.

*பொருட்கள் அனைத்தும் ஆறியதும் அவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் ஒரு கைப்பிடி அளவு பொட்டுக்கடலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் மண மணக்கும் பருப்பு பொடி தயார் .

Views: - 761

0

0