சாலை வசதி இல்லாமல் தவிக்கும் கிராமம்: வாக்களிக்காமல் தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பு…!!

6 April 2021, 5:27 pm
dharmapuri boycot - updatenews360
Quick Share

தர்மபுரி: பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைகிராமமான கோட்டூர், ஏரிமலை கிராம மக்கள் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தராததால் தொடர்ந்து தேர்தலை புறக்கணித்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள வட்டவனஅள்ளி பஞ்சாயத்திற்குட்பட்டது கோட்டூர் மலை, ஏரிமலை. மலைகிராமமான இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். விவசாயமே பிரதான தொழிலாக உள்ள இந்த மலை கிராம மக்களுக்கு தங்களது நிலத்தில், விளையும் விவசாய பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல போதிய சாலை வசதி இல்லாததாலும், அப்பகுதி மக்கள் நோய் வாய்ப்பட்டால் உரிய மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இயலாமல் தொட்டில் கட்டி தூக்கி செல்லும் நிலை உள்ளது.


இதனால் தங்கள் மலை கிராமங்களுக்கு சாலை வசதி வேண்டும் என பல ஆண்டுகளாக மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் ஒவ்வொரு தேர்தலுக்கும் அரசியல் கட்சியினர் மலை கிராமத்திற்கு சாலைவசதி செய்து கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதியை கொடுத்து விட்டு செல்கின்றனர். ஆனால் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு மலை கிராம மக்களின் பிரச்சனையை தீர்க்க முன் வராததால், நடைபெற உள்ள சட்ட தேர்தலை புறக்கணிக்க போவதாக இருமலை கிராம மக்களும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மலை கிராமத்திற்கு செல்லும் மலை அடிவாரத்தில், தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆனால் அரசு அதிகாரிகள் யாரும் மலை கிராமத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று கோட்டூர் மற்றும் ஏரிமலை இரு கிராமத்திற்கும் அப்பகுதி மக்கள் வாக்களிக்க கழுதை மீது மின்னனு வாக்கு இயந்திரத்தை கொண்டு சென்றனர். ஆனால், அப்பகுதி மலைவாழ் மக்கள் தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததால், ஒட்டுமொத்த கிராம மக்களுக்கு தங்களது முடிவிற்கு பின் வாங்காமல் தொடர்ந்து காலை 11 மணி வரை யாரும் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதனால் வாக்குசாவடி மையம் வெறிச்சொடி காணப்பட்டது.

Views: - 40

0

0