சுவர் இடிந்து விழுந்து 13 வயது சிறுவன் உட்பட 3 பேர் படுகாயம்

Author: Udayaraman
14 October 2020, 11:01 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்து 13 வயது சிறுவன் உட்பட 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காதர் பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தினை ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து விழுந்தது. அதில் அருகில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த கட்டைமேடு பகுதியை சேர்ந்த அர்ஜூன்(24), சங்கர்(50) மற்றும் தந்தைக்கு உணவு எடுத்து வந்த அர்ஜுன் மகன் 13 வயது சிறுவன் நிதீஷ் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்து வாணியம்பாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற வாணியம்பாடி நகர போலீசார் ஜேசிபி ஓட்டுநர் செக்குமேடு பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீதியோரம் கடை வைத்து வியாபாரம் செய்துவரும் சிறுகுறு வியாபாரிகளின் நிலைமை விபத்துக்குள்ளாகும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவதால் சிறு குறு வியாபாரிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Views: - 37

0

0