ஶ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.28.83 லட்சம் வசூல்…

Author: kavin kumar
26 August 2021, 11:33 pm
Quick Share

திருச்சி: ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.28 லட்சத்து 83 ஆயிரத்து 705 ரூபாய் ரொக்கப்பணம், 62 கிராம் தங்கம் மற்றும் 34 கிலோ வெள்ளியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

திருச்சி ஶ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் சிறப்புக்குரியது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, சுவாமியை தரிசித்து செல்வது வழக்கம். அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கடன்கள் மற்றும் காணிக்கைகள் மாதம் 2 முறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.கோயில் இணை ஆணையர் மாரிமுத்து,

தக்காரும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களின் மண்டல இணை ஆணையரும்மான அரங்க.சுதர்சன், திருவானைக்கோயில் உதவி ஆணையர் மாரியப்பன், மேலாளர் உமா ஆகியோரின் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு காணிக்கைகளை எண்ணினர். அதில், உண்டியல் காணிக்கையாக 28 லட்சத்து 83 ஆயிரத்து 705 ரூபாய் வசூலாகி இருந்தது. மேலும், 62 கிராம் தங்கம், 34 கிலோ 278 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றிருந்தது. அத்துடன், டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 48-ம் கிடைப்பெற்றது. வெள்ளியின் அளவான 34 கிலோ 278‌ கிராம் என்பது மாதாந்திர உண்டியல் எண்ணிக்கையில் கிடைக்கப்பெற்ற அதிகபட்ச அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 147

0

0