பிஸ்கட் வியாபாரியிடம் 1.50 லட்சம் ரூபாய் பறிமுதல்

11 March 2021, 1:47 pm
Quick Share

திருவண்ணாமலை: செங்கம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் பிஸ்கட் வியாபாரியிடம் உரிய அனுமதியின்றி எடுத்து சென்ற 1.50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது திருவண்ணாமலையிலிருந்து – தர்மபுரி நோக்கி சென்ற மினி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கொண்டு சென்ற ஒரு லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனர்.

செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும்படை அதிகாரி மருதாசலம் தலைமையிலான போலீசார் மற்றும் துணை ராணுவ படைவீரர்கள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவனங்கள் இன்றி மினி வேனில் அரவிந்தன் என்ற நபர் எடுத்து சென்ற ரூபாய் ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கைப்பற்றி செங்கம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Views: - 24

0

0