காவல் நிலையத்தில் ரூ 1.80 லட்சம் ரொக்கம் பறிமுதல்

12 January 2021, 2:24 pm
Quick Share

திருச்சி: முசிறி மதுவிலக்கு காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ 1.80 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டி அருகே முசிறி மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீஸ் அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக லதா என்பவர் பணியாற்றி வருகிறார். முசிறி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் எல்லைகளாக மணப்பாறை போலீஸ் சரகம் மற்றும் முசிறி சரகத்திற்குட்பட்ட போலீஸ் நிலைய பகுதிகள் உள்ளது. இந்நிலையில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் அதிகமாக லஞ்சம் தரப்படுவதாக புகார் மனுக்கள் சென்றது. இதையடுத்து திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. ராஜீ தலைமையிலான போலீசார் மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்குள் புகுந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதில் கணக்கில் வராத ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. கணக்கில் வராத ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் யாரால் கொடுக்கப்பட்டது, யார் வாங்கியது, காவல் நிலையத்திற்குள் அந்தப் பணம் வருவதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் அங்கிருந்த போலீசாரிடம் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணத்தை பறிமுதல் செய்த போலீசார் ஆவணங்களில் கையொப்பம் பெற்ற பின்னர் விசாரணைக்கு திருச்சி அலுவலகம் வருமாறு கூறி சென்றுள்ளனர்.

Views: - 5

0

0