உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 10 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் பறிமுதல்

25 March 2021, 1:32 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 10 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி செந்தில்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கும்மிடிப்பூண்டியில் உள்ள சூரியதேவ் தனியார் இரும்பு உருக்குதொழிற்சாலையில் இருந்து பங்கஜ் அகர்வால் என்பவர் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற 10 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணைக்கு

பின்னர் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகுருவிடம் ஒப்படைத்தனர். எளாவூர் அருகே நெல்லூரில் இருந்து சென்னைக்கு சென்ற ஜனரத்னம் என்கிற பழ வியாபாரியிடம் இருந்து 94 ஆயிரம் ரூபாய் பணத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதால் அதனை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Views: - 8

0

0