10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம்: கிரண்பேடியின் எண்ணத்தை தகர்த்த அரசு நடவடிக்கை

22 November 2020, 10:33 pm
Pondy CM - Updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கக்கூடாது என்ற கிரண்பேடியின் எண்ணத்தை தகர்த்து இந்தாண்டே செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், நாடுமுழுவதிலும் உள்ள மாநிலங்களில் புதுச்சேரியில் தான் குணமடைந்தோர் என்ணிக்கை 95 சதவீதத்தை தாண்டியுள்ளதாகவும், மேலும் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மருத்துவமனைகளில் அதிகளவு படுக்கள் உள்ளதால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் சிலர் வெளியே செல்வதால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தே கண்காணிக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும்,

அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ளது அதை விரைவில் ஒப்புதல் அளிக்க அழுத்தம் கொடுத்து வருவதாகவும், அடுத்த வாரம் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்த நாராயணசாமி இந்த விவகாரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் கிரண்பேடியின் எண்ணத்தை தகர்த்து இந்தாண்டே 10 சதவீத உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Views: - 15

0

0