10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோவில் கைது

15 April 2021, 2:57 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் வயது (24 )என்பவரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 19

0

0