நான்கு விரல்களால் 1 நிமிடத்தில் 100 தண்டால் : 12ம் வகுப்பு மாணவர் கின்னஸ் உலக சாதனை

Author: kavin kumar
19 August 2021, 7:31 pm
Quick Share

மதுரை: மதுரையில் நான்கு விரல்களால் 1 நிமிடத்தில் 100 தண்டால் எடுத்து 12ம் வகுப்பு மாணவர் கின்னஸ் உலக சாதனை செய்து படைத்துள்ளார்.

மதுரை மாவட்டம் முல்லை நகர் பகுதியை சேர்ந்த கருப்பையா – முத்துமாரி தம்பதிகளின் மகன்
ஷரீஸ்பாபு. அப்பகுதியிலுள்ள தனபால் மேல்நிலைப்பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். 17 வயதான இந்த மாணவர் ஷரீஸ்பாபு தற்போது இந்த மாணவர் இரண்டு கைகள் மற்றும் நான்கு விரல்களால் 1 நிமிடத்தில் 100 தண்டால் எடுத்து கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்மேற்கு வங்காளத்தை சேர்ந்த நபர் 1 நிமிடத்தில் 85 தண்டால் எடுத்து உலக சின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.தற்போது அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக தமிழகத்தை சேர்ந்த மாணவன் ஷரிஸ்பாபு அந்த சாதனையை முறியடித்து1 நிமிடத்தில் 100 தண்டால் எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்காத சூழ்நிலையில் சாதிக்க வேண்டும் என நினைத்து இன்று இந்த கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தியுள்ளதாக ஷரீஸ்பாபு பெருமை கொள்கிறார்.

Views: - 215

0

0